கடன் தொல்லையால் மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை
பொள்ளாச்சி, செப்.27- கடன் தொல்லையால் மன முடைந்து, தூத்துக்குடி மாவட்டத்திலி ருந்து பொள்ளாச்சிக்கு குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்த மூவர், விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடு பட்டு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம், அல்லம் பட்டியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (35) சமையல் வேலை செய்து வந்தார். இவரது சகோதரிகள் மீனாட்சி (தூத்துக் குடி) மற்றும் முத்துலட்சுமி (விருது நகர்). இவர்களுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகி றது. இதனால், கடந்த வாரம் இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் தாரா புரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். பின்னர், வெள்ளியன்று பொள்ளாச்சி பிகேஎஸ் காலனியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினர். இந்நிலையில், சனியன்று மாலை கடன் பிரச்சினையால் மனமுடைந்த நிலையில், முத்துகிருஷ்ணன், மீனாட்சி, முத்துலட்சுமி ஆகிய மூவரும் தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் பொட்டாசியம் பெர்மாங்கனேட் என்ற வேதிப்பொருளை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின் னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட னர். அங்கு சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்தனர். இந்த தற்கொலை கடன் தொல்லை காரணமா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.