காப்பர் விற்பனை கடையில் திருட்டு
கோவை, ஆக.25- காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள அலுமினியம், காப்பர் விற்பனை கடையின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை அடையாளம் தெரியாத நபர் கள் திருடிச் சென்றனர். கோவை மாவட்டம், பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் அலி அஸ்கர். இவர் காந்திபுரம் நஞ்சப்பாசாலையில் அலுமினி யம் மற்றும் காப்பர் கம்பி விற்பனை கடை வைத்து நடத்தி வரு கிறார். இந்நிலையில் சனியன்று இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டுச் சென்றனர். பின்னர் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை முடிந்து திங்களன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து விரைந்து வந்த கடை உரிமையாளர் அலி அஸ்கர் உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான 2 டன் காப்பர் கம்பிகள் மற்றும் ரூ.3.80 லட்சம் திருடப்பட்டிருந்ததும், உள்ளே இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அலி அஸ்கர் காட்டூர் போலீசுக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயவியல் துறையினர் உதவியுடன் ஆய்வு மேற்கொண்ட னர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் குடிநீர் நிறுவனத்தால் பாதிப்பு
தருமபுரி, ஆக. 25 – தனியார் குடிநீர் சுத்திகரிப்பு விற்பனை நிலையத்தினால், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் குடிநீர் கம்பெனியை காலி செய்யுமாறு அன்னசாகரத்தை சேர்ந்த பெண்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷிடம் மனு அளித்தனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தருமபுரி அன்னசாக ரத்தில் 2500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன, இங்குள்ள வர்களுக்கு விவசாய நிலம் உள்ளது. கறவை மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அன்னாசாகரத்தின் பகுதியில் சனத்குமார் நதி உள்ளது. மழை காலங்களில் தண்ணீர் வந் தால் இதனை விவசாயத்திற்க்கு பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் ஒரு தனியார் கம்பெனி ராட்சத போர்வெல் அமைத்து அந்த தண்ணீரை சுத்திகரிப்பு செய்து தண்ணீரை விலைக்கு விற்கின்றனர். இதனால் அங்குள்ள விவசாய கிணறுகள் வறண்டு காணப் படுகிறது. மேலும் வீட்டு போர்வெல்லிலும் தண்ணீர் வருவ தில்லை. இந்த நிலைதொடர்ந்து நீடித்தால் தண்ணீர் தட்டுப் பாடு ஏற்படும் எனவே தனியார் குடிநீர் நிறுவனத்தை காலி செய்யுமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியை கைது செய்ய வேண்டும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் எஸ்பியிடம் புகார்
நாமக்கல், ஆக. 25 – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது தாக்கு தல் நடத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இதற்கு காரணமான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்ய வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் 108 ஆம் புலன்ஸ் ஓட்டுநர்கள் புகார் அளித்த னர். அதிமுக பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பரப்புரையில் 108 ஆம் புலன்ஸ் வாகனம் சென்றபோது அதன் ஓட்டுனரை இழிவாக பேசி இனிமேல் நோயாளி இல்லாமல் வந்தால் நீ நோயாளி ஆகுவிடுவாய் என்றார். இதன் காரணமாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், துறை யூரில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பணியாளரை தாக்கிய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது நடவ டிக்கை எடுக்கவும் கைது செய்யக்கோரி யும், பாதிக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு உதவியாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் கள் சங்கத்தில் மாநில ஒருங்கிணைப்பா ளர் நித்தியமூர்த்தி திங்களன்று மனு