tamilnadu

துயரம் நிறைந்த மக்களின் குரலாக மாணவர் குரல் ஒலிக்க வேண்டும்

துயரம் நிறைந்த மக்களின் குரலாக மாணவர் குரல் ஒலிக்க வேண்டும்

திருப்பூர், ஆக.29 – துயரம் நிறைந்த மக்களின் குரலாக மாணவர்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்று மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் முன்னாள் காவல் துறைத் தலைவர் செ. சைலேந்திரபாபு கூறினார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், நத்தக்க டையூர் காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட  வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன் தலைமையில் வெள் ளியன்று மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், “நிமிர்ந்து நில்!” என்ற தலைப்பில் முன் னாள் தமிழக காவல் துறை தலைவர் செ.சைலேந்திர பாபு  பேசியதாவது: நமது முன்னோர்கள் கல்லூரியில் படிக்க வில்லை.  நமக்கு கிடைந்த வாய்ப்பை பயன்படுத்திக்  கொள்ள வேண்டும். சாக்ரட்டிஸ், வாழ்க்கையின்  நோக்கமும், வாழ்க்கையின் பொருளும் மனமகிழ்ச்சியே  என்று கூறியுள்ளார். உங்களது சிந்தனையை கட்டுப்படுத்த  முடியாது. மாணவர்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும்,  துயரம் நிறைந்த மக்களுக்காக சிந்திக்க வேண்டும். துயரம்  நிறைந்த மக்களின் குரலாக மாணவர்கள் குரல் ஒலிக்க வேண்டும். சிறையில் கூட 25,000 நபர்கள் உள்ளனர். அனைவரும்  குற்றவாளிகள் கிடையாது. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அவர்களை குற்றவாளிகளாக மாற்றி உள்ளது.  சிறையில்  அனைத்தும் கிடைக்கும், ஆனால் சுதந்திரம் கிடைக்காது.  நிரந்தர மகிழ்ச்சி என்பது நாம் செய்யும் செயலில் உள்ளது.  மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். நேரத்தை நேர்த்தி யாக செலவழித்து காலத்தில் கடமையாற்ற வேண்டும். 24  மணி நேரம் 24 தங்க நாணயங்களை போன்றது. ஒவ்வொரு  மணி நேரமும் ஒவ்வொரு தங்க நாணயத்தை போல நினைத்து காலத்தை பயனுள்ளதாக கழிக்க வேண்டும். இவ்வாறு செ.சைலேந்திர பாபு கூறினார். இந்நிகழ்ச்சியில், கோவை மண்டல கல்லூரிக் கல்வி  இணை இயக்குநர் நா.செண்பகலெட்சுமி, மாபெரும் தமிழ்க் கனவு ஒருங்கிணைப்புக் குழு அலுவலர் இ.சேனா வரையன், மாபெரும் தமிழ் கனவு மாவட்ட தொடர்பு  அலுவலர் வ.கிருஷ்ணன், கண்காட்சி அரங்குகள் ஒருங்கி ணைப்புக் குழு உறுப்பினர் ஆசிரியர் நிர்மலா, பேராசிரி யர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் துறை சார்ந்த  அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.