tamilnadu

img

மாணவனை பெல்ட்டால் தாக்கிய விவகாரம் - கோவையில் தனியார் விடுதி மூடல்!

தனியார் விடுதியில் சிறுவனை காப்பாளர் பெல்ட்டால் தாக்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விடுதியை மூடி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே கோட்டைப்பாளையம் பகுதியில் இயங்கி வந்த தனியார் காப்பகத்தில் பயின்று வந்த சிறுவனை காப்பாளர் செல்வராஜ் பெல்டால் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு, குற்றம் உறுதியானதை அடுத்து, செல்வராஜ் மீது கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், காப்பாளர் செல்வராஜ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
மேலும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காப்பகத்திற்கு தடை விதிக்கப்பட்டு, அது மூடப்பட்டது. இதனையடுத்து, அந்த காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வந்த 9 மாணவர்கள், அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள அரசு மாணவர் விடுதிகளுக்கு மாற்றப்பட்டனர். மேலும், பாதுகாப்பு கருதி சில மாணவர்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.