tamilnadu

img

கூட்ட நெரிசலில் சிக்கிய இளைஞரின் உடல்நலம் பாதிப்பு அமைச்சர் நேரில் நலம் விசாரித்தார்

கூட்ட நெரிசலில் சிக்கிய இளைஞரின் உடல்நலம் பாதிப்பு
அமைச்சர் நேரில் நலம் விசாரித்தார்

கோவை, செப்.29- நாமக்கல் தவெக பிரச்சார கூட்ட  நெரிசலில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான  நிலையில் கோவை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞ ரின் உடல்நிலை குறித்து அமைச்சர் மதி வேந்தன் திங்களன்று நேரில் சென்று நலம் விசாரித்தார். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத் தில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட  நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சுமார் 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் மயங்கி  விழுந்து மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டனர். அவர்களில் உயி ருக்கு ஆபத்தான நிலையில் இருந்த  நான்கு பேர் நாமக்கல், ஈரோடு,  சேலம், கோவை மாவட்டங்களில்  உள்ள தனியார் மருத்துவமனைக ளுக்கு மேல் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டனர். அதில் நாமக்கல் மாவட் டம் கண்ணூர்பட்டியை சேர்ந்த மனோஜ்  (24) என்ற இளைஞர் வலிப்பு ஏற்பட்டு சுயநினைவின்றி மேல் சிகிச்சைக்காக கோவை அவிநாசி சாலையில் உள்ள கேஎம்சிஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில் கோவை தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் மனோஜை  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் திங்களன்று நேரில் சென்று  நலம் விசாரித்தார். பின்னர் இளைஞரின்  உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.