மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி
சேலம், ஆக.28- சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில், மாபெ ரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி, சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தலை மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு, ‘உயர்குணமேவிய தமிழா’ என்ற தலைப்பில் கருத்து ரையாற்றினார். இந்நிகழ்வில், சிறப்பான பங்களிப்பை நல்கிய மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுகள் தெரி வித்து சான்றிதழ் வழங்கப்பட்டன. சோனா கல்வி நிறு வன தலைவர் வள்ளியப்பா மற்றும் அரசு அதிகாரி கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.