இரட்டை குவளையும் - இரண்டு பேருந்தும் புதிய பேருந்தால் அதிகரிக்கும் பிளவு
கோவை, செப்.3- “சாதி ஆதிக்கவாதிகள் தீண்டா மையை கடைபிடிக்கிறார்கள், நியா யம் வேண்டும்” என்கிற குரலுக்கு, அரசு போக்குவரத்து கழகத்தின் விநோதமான தீர்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரத்தில் இருந்து தொண்டாமுத்தூர் ஒன்றி யம் கெம்பனூர் அண்ணா நகர் வரை வழித்தடம் 21 எண் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அண்மைக் காலமாக அண்ணா நக ருக்குச் செல்லாமல் கெம்பனூரி லேயே பேருந்தை திருப்பிக் கொண்டு சென்றது அப்பகுதி மக்க ளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. அண்ணா நகர் பகுதியில் பெரும்பாலானவர்கள் பட்டியலின மக்கள் வசிப்பதால், இங்கிருந்து புறப்படும் பேருந்தில், தலித் மக்கள் இருக்கையை நிரப்பி விடுகிறார் கள் என்றும், அடுத்து கெம்பனூர் வருகிறபோது, ஆதிக்கசாதியை சேர்ந்தவர்கள் பேருந்தில் ஏறுகிற போது நின்று கொண்டே பயணிக்க வேண்டியிருக்கிறது. “இவங்க உட் காருவாங்க நாங்க நிற்கிறதா” என் கிற வன்மக்குரல் ஆதிக்கவாதிக ளின் பகுதியில் ஒலிக்க துவங்கி யுள்ளது. இதனையடுத்து, யார் கொடுத்த அழுத்தமோ அண்ணா நகருக்கு அரசு பேருந்து செல்லா மல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால், அண்ணாநகரில் வசிக்கிற ஏழை எளிய தலித் மக்கள் உழைப்பாளிகள், தங்களது பணிக்கு செல்ல கெம்பனூர் வரை நடந்தே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேபோன்று, பேருந்து சேவை தங்களது பகு திக்கு புறக்கணிக்கப்பட்டதால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர் களும் வெகுதூரம் நடந்தே வந்து பேருந்தை பிடிக்க வேண்டியிருந் தது. இந்த அப்பட்டமான தீண்டாமை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, முற்போக்கு அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. மேலும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி செவ்வாயன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தை நடத்தியது. சில ஆதிக்க சாதியினரின் எதிர்ப் பிற்கு அரசு போக்குவரத்துக்கழ கம் பணிந்து போவதாகவும், உடன டியாக அண்ணாநகர் பகுதிக்கு பேருந்து சேவையை நீட்டிக்க வேண்டும், சமூக பதற்றத்தை உரு வாக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். மாவட்ட ஆட்சி யர் உடனடியாக இவ்விகாரத்தில் தலையிட வேண்டும் என ஆர்ப்பாட் டத்தில் ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில், இப்பிரச் சனைக்கு அரசு போக்குவரத்து கழ கம் விநோத தீர்வினை முன்வைத் துள்ளது. இதன்படி அண்ணா நகர் வரை சென்று கொண்டிருந்த வழித் தடம் 21 எண் கொண்ட அரசு பேருந்து இனி கெம்பனூர் வரை தான் செல்லும். அண்ணா நகருக்கு பேருந்து தானே வேண்டும். உங்க ளுக்கு புது பேருந்தை விடுகிறோம் என ஒரு பேருந்தை வரவழைத்து, அதன் முன்பு அப்பகுதி மக்களை நிறுத்தி குழு புகைப்படம் எடுத்துச்சென்றுள்ளனர். அரசுப் போக்குவரத்து கழகத்தின் இந்த விநோதமான தீர்வே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பாவியாக அங் கிருந்த ஒரு மூதாட்டி, நாளை எங்க ஊர்ல இருக்கிற பள்ளிக்கூடத் துல, அண்ணாநகர் பசங்க படிக்க வரக்கூடாது அப்படின்னு அந்த மேல்சாதிக்காரங்க சொன்னா, எங் களுக்கு புதுசா இங்கேயே பள்ளிக்கூடம் கட்டித்தருவாங் களா? எங்க ஊருக்கு வருகிற பஸ் சுல நாங்க முதலில் ஏறிக்கிறோம், அந்த மேல் சாதிக்காரங்களுக்கு இடம் கிடைக்க மாட்டிங்கிதுன்னு பஸ்ச எங்க ஊருக்கு வராம தடுத் திட்டாங்கன்னு நியாம் கேட்டு போனா, அந்த பஸ்சு அவங்கள மட் டும் ஏத்தட்டும். உங்களுக்கு புது பஸ்சு தரேன்னு சொன்னா இது தான் இவங்க தீண்டாமையை ஒழிக்கும் லட்சணமா? என்று கேட்ட கேள்விக்கு அரசு போக்குவரத்து கழகமும், மாவட்ட நிர்வாகமும் தான் பதில் சொல்ல வேண்டும்.