tamilnadu

img

உரிமைக்காக ஆசிரியர்களை சங்கமாக அணிதிரட்டிய ஆசிரியர் செ.நடேசன்

உரிமைக்காக ஆசிரியர்களை சங்கமாக அணிதிரட்டிய ஆசிரியர் செ.நடேசன்

தமிழகத்தின் ஆசிரியர்கள் அனைவராலும் அதிகம் உச்சரிக் கப்பட்ட பெயர் செ.நடேசன். ஊத்துக்குளியில் வசித்து வந்த செ.நடேசன் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி மறைந்தார். அவரது மூன்றாவது நினைவு தினம் இன்று. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்னும் இயக்கத்தை உருவாக்கிய ஸ்தாபக தலைவர்களுள் ஒரு வர். இயக்கத்தின் பொதுச்செய லாளராக நீண்ட நாள் பணி செய்து சரித்திரம் படைத்தவர். கடினமான காலங்களில் இயக்கத்தை சரியாக திட்டமிட்டு மாநில பொறுப்பாளர்களுடன் இணைந்து வழி நடத்தியவர். தகவல் தொடர்போ, போக்கு வரத்து வசதிகளோ இல்லாத காலங்களில் தமிழகம் முழுவ தும் கிளைகளைப் பரப்பி இயக் கத்தை வளர்க்க துணை நின்ற வர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்னும் இயக்கத்தின் பாதையை விரிவு படுத்த கடுமையாக உழைத்த வர். கல்வி நலன், மாணவர் நலன், ஆசிரியர் நலன் இவற் றிற்கு எதிரான அரசின் திட்டங் கள், சட்டங்களுக்கு எதிரான பல போராட்டக் களங்களை வகுத்து வெற்றி கண்டவர். ஒன் றிய அரசுக்கு இணையான ஊதியம் என்ற கோரிக்கையை வகுத்து சரியான திட்டமிட்டு போராட்டங்களை நடத்தி, ஆட்சி யாளர்கள், அதிகாரிகள் அனை வரிடத்திலும் கோரிக்கையின் தேவையை, நியாயத்தைத் தெளிவாகவும் துல்லியமாகவும் விவரித்து வென்றெடுத்து, தமிழ்நாட்டின் ஆசிரியர்களின் பொருளாதார வாழ்க்கையை முன்னேற வைத்தவர். நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆசி ரியர் பயிற்சி மாணவர்களை அரசும், அதிகாரிகளும், சகோ தர சங்கங்களும் கைவிட்ட போதும், விடாப்பிடியான, திட்ட மிட்ட போராட்டங்கள் மூலம்  அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க காரணமாக இருந்த வர். கல்வியை காப்பதற்காக பல கருத்தரங்குகளை நடத்தி காட்டியவர். ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை மாற்றப்பட்டபோது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்த காரண மாக இருந்தவர். சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர். கோரிக்கைகளை வென்றெடுக்க விடாப்பிடியான வாதாடும் திறன் கொண்டு செயல்பட்டவர். முன்கூட்டியே ஆசிரியர்களுக்கு வரவிருக்கும் பிரச்சனைகள் குறித்து அறிந்து சொல்லக்கூடிய ஆற் றல் பெற்றவர். இந்திய பள்ளி  ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கி ணைப்பு குழு (CCSTO) உரு வாக காரணமாக இருந்தவர். பின்னர் அது இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) என பெயர் மாற்றம் பெற்றது. சிறந்த எழுத்தாற்றல் மிக்க வர். பணி நிறைவுக்கு பின்னரும் மொழிபெயர்ப்பில் முத்திரை பதித்தவர். தனது சொந்த வாழ்வில் பல இழப்பு களை சந்தித்த போதும் கலங் காமல் இயக்கத்தை வழி நடத்தியவர். தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் மாவட்டத் துணைத்தலைவராக ஆர்வத்து டன் செயல்பட்டவர்.  தமிழகத்தில் பல முக்கிய புத்தகங்கள் மொழிபெயர்த்தவர், ஆசிரியர்கள், முற்போக்கு இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பல தியாகங்கள் செய்த ஆசிரியர் செ.நடேசன் நினைவுகள் இன் றைய தலைமுறைக்கு வழிகாட் டும்! ஜான் கிறிஸ்துராஜ்