tamilnadu

img

ததீஒமு பேரவைக் கூட்டம்

ததீஒமு பேரவைக் கூட்டம்

கோபி, ஜூலை 16- விடுதலை போராட்ட வீரர்கள் என்.சங்கரய்யா, ஜி.எஸ்.இலட்சுமண அய்யர் ஆகியோரின் நினைவு களை போற்றும் சிறப்பு பேரவைக் கூட்டம் ஈரோடு, கோபி யில் செவ்வாயன்று நடைபெற்றது. தலைவர் தனசிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொருளாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். இதில், ததீஒமு மாவட்டச் செயலாளர் எம்.அண்ணாதுரை, தாலுகா செயலாளர் க.பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து, பி.சுந்திரராஜன், தவிச மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனு சாமி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். பேரவையில், கோபி தாலுகா தலைவராக கே.சி. ரங்கசாமி, செயலாளராக ஏ.மாரிமுத்து, பொருளாளராக ஏ.வேலுச்சாமி உள்ளிட்ட 15 பேர் கொண்ட தாலுகாக்குழு தேர்வு செய்யப்பட்டது.