tamilnadu

img

தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பே போனஸ் கோரி டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பே போனஸ் கோரி டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.7- டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய போனஸ் தொகையை தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பே வழங்க கோரி சிஐடியு திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அங்கேரிப்பாளையம் சாலை  மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு, திருப்பூர் மாவட்ட டாஸ்மாக்  குடோன் சுமைப்பணி தொழிலா ளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பி. பாலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக்  குடோன் சுமைப்பணி தொழிலாளர் களுக்கு சட்டப்படியான ஆண்டு போனஸ் தீபாவளி பண்டிகை 10 நாட் களுக்கு முன்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்கேனிங் செய் யும் வேலைகளுக்கு கூலி வழங்க வேண்டும். பெட்டிக்கு ரூ3.50 என  ஒரே மாதிரி ஏற்றுக்கூலியை ஒப்பந்த  படிவத்திலேயே உத்திரவாதப்ப டுத்த வேண்டும். எச்எல் என்ற பெய ரில் சுமைப்பணித் தொழிலாளர் களின் கூலியில் மாதாமாதம் பணம்  கட்டச்சொல்வதை தடுத்து நிறுத்த  வேண்டும். குடோன்களில் அடிப் படை வசதி செய்து கொடுக்க வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தப்பட்டன. இதில்,  மாவட்டப் பொருளாளர் டி.ஜெய பால் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். காங்கேயம் இதேபோல் டாஸ்மாக் சுமைப்ப ணித் தொழிலாளர்களுக்கு போனஸ்  தீபாவளி பண்டிகைக்க்கு 10 நாட்க ளுக்கு முன்பே வழங்க வலியுறுத்தி காங்கேயம் பகவதிபாளையம் குடோன் முன்பு சிஐடியு டாஸ்மாக்  குடோன் சுமைப்பணி தொழிலாளர் கள் மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. டாஸ்மாக் சுமைப்பணி சங்க நிர்வாகி தங்கராசு தலைமை ஏற்றார்.  சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர்  கே.திருவேங்கடசாமி போராட் டத்தை விளக்கிப் பேசி, வாழ்த்தி னார். சுமார் 20  தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.