டாஸ்மாக் ஊழியர்களின்: நீண்ட போராட்டமும், தீர்க்கப்படாத பிரச்சனைகளும்
தமிழ்நாட்டில் கடந்த இருபது ஆண்டுகளாக சில் லறை மது விற்பனையை அரசே ஏற்று நடத்தி வரும் டாஸ்மாக் நிறுவனம், பல ஆயிரம் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது. ஆனால், இந்த ஊழியர்களின் பணிச்சூழல், பாதுகாப்பு மற்றும் நலன்கள் குறித்த பல கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. 29.03.2003 அன்று அன்றைய முதல்வர் ஜெயல லிதா, விதி எண்110-ன் கீழ், தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மது விற்பனையை நேரடி யாகவும், மதுக்கூடங்களை தனியாரிடமும் ஒப் படைத்து, ஒரு கலப்பு மாதிரியில் (Public-Private Partnership) செயல்படத் தொடங்கியது. வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களிடம் வைப்புத் தொகையும் பெறப்பட் டது. ஆனால், ஆரம்பம் முதலே பணியாளர்கள் பல் வேறு சவால்களை எதிர்கொண்டனர். வார விடு முறை, ஓய்வு, எட்டு மணி நேரம் வேலை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கூட இல்லாத நிலை. மேலும், சட்ட விதிகளை மீறி, எந்தவித விசாரணையுமின்றி பணியிடை நீக்கம், பணி நீக்கம் போன்ற நடவடிக்கை களால் பல ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். மதுக்கூடங்களை தனியாரிடம் ஒப்படைத்த நிலை யில், லாபம் இல்லா மதுக்கூடங்களை நடத்தும்படி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். இதனால் சம் பளம், போனஸ் உள்ளிட்ட தொகைகளை நிர்வாகம் பிடித்தம் செய்தது. இதற்கு எதிராக ஊழியர்கள் பல் வேறு போராட்டங்களை நடத்தினர். அக்டோபர் 10, 2010 அன்று சிஐடியு (CITU) மற்றும் ஏடிபி (ATP) உட் பட அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத் தன. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை வென்றெடுக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்றார். ஆனால், அடுத்த 10 ஆண்டுகள் அவர் ஆட்சி செய்தபோதும், வாக்குறுதியை நிறை வேற்றவில்லை. சவால்களும், நெருக்கடிகளும்: டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டே வருகின்றனர். மதுவிலக்கு ஆதரவுப் போராட்டங்களில், பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற வன்முறை சம்பவங்கள், என பல சம்பவங்கள் ஊழி யர்களுக்கு நேரடியாக அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்ற உத்தரவால் தேசிய நெடுஞ்சாலை களில் உள்ள கடைகள் மூடப்பட்டபோது, அந்தக் கடைகள் ஊர்களுக்கு வெளியே, மயானங்களை அருகில் திறக்கப்பட்டன. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் எதிர்ப்பை ஊழி யர்களே நேரடியாகச் சந்திக்க நேர்ந்தது. பின்னர், இழந்த வருவாயை ஈட்ட, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ் சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, அதே இடங் களில் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. சட்டப் போராட்டங்களும், தற்போதைய நிலையும்: நீதியரசி மரியா கிளிட் பிறப்பித்த உத்தரவு, மோசடி தடுப்பு விதிகளை நீக்கி, நிலையாணை விதி முறைகளை உருவாக்க வழி வகுத்தது. ஆனால், இது ஒரு தொடக்கமாக மட்டுமே இருந்தது. தவறான குற்றச்சாட்டுகளால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பிழைப்பூதியம் மறுக்கப் படுகிறது, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு முழுமையாக வழங்கப்படுவதில்லை, போன்ற பிரச்சனைகள் இன்னும் நிலுவையில் உள் ளன. தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி 153-ன்படி, 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அரசுப் பொதுத்துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவார்கள் என்று உறுதியளிக்கப்பட்ட போதிலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு இந்த வாக்குறுதி முழுமை யாகச் செயல்படுத்தப்படவில்லை. மேலும், 480 நாட் கள் பணியாற்றிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிராகவும் டாஸ்மாக் நிர்வா கம் மேல்முறையீடு செய்தது, ஊழியர்களின் நம்பிக் கையைச் சிதைத்துள்ளது. போராட்டத்தின்போது நடத்தப்படும் பேச்சு வார்த்தைகளில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் நிறை வேற்றப்படுவதில்லை. கால தாமதம், காலாவதியான வாக்குறுதிகள் எனப் பல போராட்டங்கள் வீணாகிவிட் டன. காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம், குறை தீர்க்கும் குழு இல்லாதது போன்ற பிரச்சனை கள் ஊழியர்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள் ளன. நம்பிக்கையின் குரல்: ஊதிய உயர்வு, போனஸ், ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது, 480 நாள் பணி நிறைவு செய்த வர்களை பணி நிரந்தரம் செய்வது போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் நீதிமன்றத்தில் தொடர் சட்டப் போராட் டங்களை நடத்தி வருகிறது. இந்த வழக்குகளில் ஊழி யர்களுக்குச் சாதகமான தீர்ப்புகள் கிடைத்த போதும், அந்தத் தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறை யீடு செய்து நீதியைத் தாமதப்படுத்துவதாக நிர்வாகத் தின் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற வுள்ளது. “உங்களுடன் முதல்வர்” மற்றும் “எல்லோருக் கும் எல்லாம்” போன்ற முழக்கங்களை முன்வைக்கும் தமிழக அரசு, டாஸ்மாக் ஊழியர்களின் குடும்ப நம்பிக் கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே எதிர் பார்ப்பு. இந்த நீண்டகாலப் போராட்டங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்குமா என்பது காலத்தின் கையில் மட்டுமல்ல ஊழியர்களின் தொடர்ச்சியான போராட் டத்திலும் உள்ளது. எஸ்.ராமகிருஷ்ணன் பொருளாளர் - சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம், கோவை