ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்திடுக
சிஐடியு சேலம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
சேலம், ஆக.23- சேலம் உருக்காலை வளாகத் தில் ராணுவ தளவாட தொழிற் சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு சேலம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய தொழிற்சங்க மையத் தின் (சிஐடியு) சேலம் மாவட்ட 14 ஆவது மாநாடு, சேலம் ஐந்து ரோடு பகுதியிலுள்ள குஜராத்தி மண்டபத் தில் தோழர் எஸ்.ரமணி நினைவரங் கத்தில் சனியன்று துவங்கியது. மாவட்டத் தலைவர் பி.உதய குமார் தலைமை வகித்தார். துவக்க நிகழ்ச்சியாக, சேலம் சிறை தியா கிகள் நினைவு ஜோதியை, எஸ்.திருப்பதி பெற்றுக்கொண்டார். தோழர் எம்.ஸ்ரீரங்கன் நினைவு ஜோதியை பி.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். சங்கத்தின் கொடியை மாவட்ட உதவித்தலை வர் எஸ்.கே.தியாகராஜன் ஏற்றி வைத்தார். மாவட்ட உதவித்தலை வர் ஆர்.வெங்கடபதி வரவேற்றார். உதவித்தலைவர் எஸ்.வசந்த குமாரி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராஜன் உரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் ஏ. கோவிந்தன், பொருளாளர் வி. இளங்கோ ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். இம்மாநாட்டில், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்து, 30 நாட்கள் கோடை விடுமுறை அளிக்க வேண் டும். சுமைப்பணி தொழிலாளர்க ளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். கட்டுமானத் தொழிலா ளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். போக்குவரத் துத்துறையை தனியார் மயப்ப டுத்தும் நிகழ்வாக இ-பேருந்து உள் ளிட்ட திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. போக்குவ ரத்து தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க தனியார் மயத்தை போக்குவரத்து துறை யில் கொண்டு வரக்கூடாது. பணி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழி லாளர்களுக்கான பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவ னத்தை தமிழக அரசின் அனுமதி யில்லாமல் ஆலை நிர்வாகம் மூடி யுள்ளது. 400க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய நிலையில், தொடர்ந்து ஆலையை நடத்த தமி ழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். சேலம் உருக்காலை வளாகத் தில் 1400 ஏக்கர் காலி நிலமும், கட்ட மைப்பு வசதிகளும் உள்ள நிலையில், இங்கு ராணுவ தளவாட தொழிற்சாலை அமைத்திட மாநில அரசு தலையீடு செய்ய வேண்டும். செயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டி லுள்ள சேலம் செயில் ரிபாக்டரி நிறு வனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, ஞாயிறன்றும் (இன்று) மாநாடு நடைபெறவுள்ளது.