ஸ்விக்கி, சோமேட்டோவுக்கு மாற்று புதிய செயலி அறிமுகம்
நாமக்கல், ஜூலை 7 – பிரபல உணவு டெலிவரி நிறுவ னங்களான ஸ்விக்கி மற்றும் சோமேட்டோவுக்கு மாற்றாக, நாமக்கல் தாலுகாவில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் சங் கம், ‘ZAAROZ’ என்ற புதிய ஆன் லைன் உணவு டெலிவரி செய லியை திங்களன்று அறிமுகம் செய் தனர். ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ நிறுவனங்கள் தங்கள் கமிஷன் தொகையை 35 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்குமாறும், மறைமுக விளம்பரக் கட்டணங் களை வசூலிப்பதை நிறுத்து மாறும் நாமக்கல் தாலுகா ஹோட் டல் உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக அந்த நிறுவன அதி காரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, சங் கத்தினர் ஜூலை 1-ம் தேதி முதல் உணவு ஆர்டர்களை வழங்குவதை நிறுத்திவிட்டனர். இதனைத்தொடர்ந்து நாமக் கல் மாவட்ட ஹோட்டல் உரிமையா ளர்கள் சங்கம் புதிய செயலியை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இதன்படி, புதிய செயலியின் அறிமுக விழா நாமக்கல் ஆஞ்சநே யர் கோயிலில் திங்களன்று நடை பெற்றது. நாமக்கல் மாவட்ட வணி கர் சங்க பேரமைப்பின் தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் செய லியை அறிமுகப்படுத்த, ஹோட் டல் உரிமையாளர்கள் அதைப் பெற்றுக்கொண்டனர். நகர ஹோட்டல் உரிமையாளர் சங்கச் செயலர் அருள்குமரன் கூறுகையில், “ZAAROZ செயலி மூலம் உணவுகளை ஆர்டர் செய் தால், உணவகங்களில் விற்கப்ப டும் அதே விலைக்கே உணவுகள் டெலிவரி செய்யப்படும். முதற் கட்டமாக 50 பணியாளர்கள் உணவு டெலிவரியில் ஈடுபட்டுள்ளனர். இந்த செயலியைப் பயன்படுத் தினால் 30% வரை விலை குறை வாக இருக்கும். விரைவில் நாமக் கல் மாவட்டம் முழுவதும் இந்த செயலியைப் பயன்படுத்த வாய்ப் புள்ளது,” என்றார். இச்செயலியை கடலூர் மாவட் டம் சிதம்பரத்தைச் சேர்ந்த ராம் பிர சாத் வடிவமைத்துள்ளார். தமிழ கத்தில் 30-க்கும் மேற்பட்ட நகரங் களில் ZAAROZ செயலி ஏற் கெனவே அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. இச்செயலி மூலம் காய் கறிகள், பழங்கள், மருத்துவப் பொருட்கள் தொடங்கி வீட்டுக் குத் தேவையான அனைத்து உப யோகப் பொருட்களையும் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வும் அருள்குமரன் தெரிவித்தார். ZAAROZ செயலி நிறுவனத் தில் பணிக்குச் சேர்ந்துள்ள ஒரு இளைஞர் கூறுகையில், “இந் நிறுவனம் இ-பைக்குகளை வழங் கியுள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தின் எரிபொருள் செலவு மிச்சமாகிறது. மேலும், விரைந்து டெலிவரி செய்யப்படுவதுடன், சுற் றுச்சூழலுக்கு ஏற்படும் மாசும் தடுக் கப்படுகிறது,” என்றார். இந்த செயலி மூலம் உணவு களை ஆர்டர் செய்தால் ஹோட்டல் விலைக்கே வழங்கப்படும் என ஹோட்டல் உரிமையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். உணவுப் பொருள் வழங்கல் துறை சார்ந்த வர்கள் இந்த புதிய முயற்சியை வர வேற்றுள்ளனர்.