tamilnadu

img

ஆழியார் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம்

ஆழியார் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம்

கோவை, ஆக.30 - பொள்ளாச்சி அருகே உள்ள ஆழி யார் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி 5 மதகு கள் வழியாக உபரி நீர் வெளியேற் றப்படுகிறது. இதனால், கரையோர மக் களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கவர்க்கல், சத்தி எஸ்டேட், காடம் பாறை மற்றும் அப்பர் ஆழியார் போன்ற  நீர் பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரண்டு  நாட்களாகக் கனமழை பெய்து வருகி றது. இதன் காரணமாக, 120 அடி உயரம்  கொண்ட ஆழியார் அணையின் நீர்மட் டம் தற்போது 119.50 அடியாக உயர்ந் துள்ளது. மேலும், அணைக்கு வினா டிக்கு சுமார் 1500 கன அடிக்கும் மேல் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கையாக வினா டிக்கு 1500 கன அடி உபரி நீர் 5 மதகு கள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகி றது. இதனால், ஆழியார் ஆற்றின் கரை யோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிப்பதையோ, துணி துவைப்பதையோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதையோ தவிர்க்கு மாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.