tamilnadu

img

கல்வி நிறுவனங்களில் தற்கொலைகள்

கல்வி நிறுவனங்களில் தற்கொலைகள் இந்திய மாணவர் சங்க மாநாடு கவலை

கோவை, ஆக.9 – கல்வி நிறுவனங்களில் மர்ம மான முறையில் நடைபெறும் தற் கொலைகள் கவலையளிப்பதாக உள்ளது. அரசு நிர்வாகம் உரிய தலையீடு மற்றும் ஆய்வுகளை நடத்தி, இதுபோன்ற தற்கொலை களை தடுத்து நிறுத்த வேண்டும் என  இந்திய மாணவர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் 22 ஆவது, கோவை மாவட்ட மாநாடு  கணபதியில் உள்ள இன்ஜினியரிங் சங்க அலுவலகத்தில் சனியன்று  நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அகமது ஜுல்ஃபிகர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், முன் னாள் மாவட்டச் செயலாளர் அசாருதீன் கொடி ஏற்றினார். நிகழ்ச் சியில் அகில இந்திய வழக்கறிஞர் கள் சங்க மாவட்டச் செயலாளர் ஜோதிக்குமார் சிறப்புரையாற்றி னார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா வாழ்த்தி பேசினார். மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் ஜெகதீஷ் வேலை அறிக்கையை முன்மொழிந்தார்.  இம்மாநாட்டில் பாரதியார் பல் கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேர்வு கட்டுப்பாட்டாளர், பதிவா ளர், ஆசிரியர்கள் பற்றாக்கு றையை நிரப்ப வேண்டும். பாரதி யார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கட்டணத்தை குறைக்க வேண்டும். அரசு கலைக் கல்லூரி களில் அடிப்படை வசதிகளை மேம் படுத்த வேண்டும். பள்ளி கல்லூரி களில் ஐசிசி கமிட்டியை அமைக்க  வேண்டும்.  விடுதி மாணவர்களின் உணவுப் படியை உயர்த்தி வழங்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் நடைபெறும் மர்ம தற்கொலை களை தடுத்து நிறுத்த, அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.  இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவராக கு.பாவெல், மாவட் டச் செயலாளராக ஜி.அகமது ஜூல் ஃபிகர்,  துணைத்தலைவர்களாக ரங்கசாமி மற்றும் ரூபா, துணைச் செயலாளர்களாக ஆசாத் மற்றும் சந்தியா உட்பட்ட 17 பேர் மாவட் டக்குழு நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலை வர் சம்சீர் அகமது நிறைவுரையாற் றினார். நீலகிரி இதேபோன்று, இந்திய மாண வர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட  சிறப்பு பேரவை கோத்தகிரியில், மாணவர் சங்க நிர்வாகி குமரன்  தலைமையில் சனியன்று நடை பெற்றது. சங்கத்தின் மாநில செயற் குழு உறுப்பினர் ஷாலினி துவக்க வுரையாற்றினார். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மணிகண்டன் வாழ்த்திப் பேசினார்.  இதில், நீலகிரியில் அரசு பொறி யியல் கல்லூரி அமைக்க வேண் டும். அரசு வழங்கும் மிதிவண்டி மலை மாவட்டத்தில் பயன்படுத்த இயலாது என்பதால், மலை மாவட்ட மாணவர்களுக்கு, பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும். அனைத்து கல்வி வளாகங்களிலும் மாணவிக ளுக்கு முறையாக நாப்கின்கள் வழங்கிடவும், நாப்கின் எரியூட்டும் இயந்திரம் அமைத்திட வேண்டும். பள்ளி, கல்லூரி நேரங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பேருந்து இயக்க வேண்டும். கோத் தகிரியில் அரசு கலைக்கல்லூரி அமைத்திட வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது. இதில், மாவட்டத் தலைவராக யோகராஜ், செயலாளராக குமரன். துணைத் செயலாளர்களாக, சிவ ரத்தினம், மௌலி மற்றும் துணைத் தலைவர்களாக சுகந்தன், அஜய் உள் ளிட்ட 15 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் பிரவீன் குமார் நிறைவுரையாற்றினார்.