அமெரிக்காவின் 50 சதவிகித வரி விதிப்பு பிரதமர் மோடிக்கு சுப்பராயன் எம்.பி. கடிதம்
திருப்பூர், ஆக. 27 - இந்திய பொருள்களுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அறி விப்பு நடைமுறைக்கு வரும் நிலையில் திருப் பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழில், தொழி லாளர் வாழ்வு கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் ஒன்றிய அரசு உடனடியாக உரிய மீட்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப் பூர் எம்.பி. கே.சுப்பராயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து கே.சுப்பராயன் எம்.பி., புதன்கிழமை பிரதமர் மோடிக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந் திய பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதிக் கப்படும் என்ற அமெரிக்க அரசின் அறிவிப்பு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ஆடைத் தொழிலுக்கு மிகப்பெரும் விளைவை ஏற்படுத்தக் கூடிய தாக உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஏற் றுமதி சந்தையாக அமெரிக்கா உள்ளது. தற் போதைய இந்த வரி விதிப்பினால் 30 முதல் 35 சதவீதம் வரை ஏற்றுமதி ஆடை விலை உயர்வு ஏற்பட்டு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே இந்திய ஆடைகள் சர் வதேச சந்தையில் சீனா வியட்நாம் வங்கதே சம் போன்ற நாடுகளோடு போட்டி போட முடியாத நிலை ஏற்படும். இது நீண்ட காலத் திற்கு சரி செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத் தும். மேலும் இது பல லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை பாதித்து, மரண அடி கொடுப்பதாக உள் ளது. எனவே இந்திய அரசு ஏற்றுமதி தொழிலை யும், தொழிலாளர்கள் வேலை வாய்ப்பையும் பாதுகாப்பதற்கு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி அமெரிக்க சந்தைக்கு 40 சதவீதம் ஆடை ஏற்றுமதி செய்யக்கூடிய நிலையில் இந்த வரி உயர்வு பேரழிவு ஏற்படுத்தும். எனவே ஒன்றிய அரசு தொழில்துறை உற் பத்தியாளர்கள் முதல் தொழிலாளர்கள் வரை அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் கோரிக்கைகளை கேட்ட றிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏற்று மதியாளர்களுக்கு வங்கி கடன் உத்தரவா தம், காப்பீடு, வட்டி மானியம், கடனுதவி, வரி விலக்கு போன்ற சலுகைகள் வழங்க வேண் டும். வேலை இழக்க கூடிய தொழிலாளர்க ளுக்கு உரிய பொருளாதார உதவி வழங்க வேண்டும். மாற்று வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும், உலக வர்த்தக அமைப்பில் அமெ ரிக்க வரி விதிப்புக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும் என கடிதத்தில் சுப்பரா யன் எம்.பி. கூறியுள்ளார்.