tamilnadu

img

மாற்றுச்சான்றிதழை தர மறுத்த கல்லூரி  நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் தர்ணா

மாற்றுச்சான்றிதழை தர மறுத்த கல்லூரி  நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் தர்ணா

சேலம், செப்.12- மாற்றுச்சான்றிதழை தர மறுத்த தனியார் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தி னர் தர்ணாவில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், காம ராஜ் நகர் பகுதியில் இயங்கி வரும் கணேஷ் கலை அறி வியல் கல்லூரியில், மாணவரின் மாற்றுச்சான்றிதழை நிர்வா கம் தர மறுத்துள்ளது. இதனைக் கண்டித்து, கல்லூரி வளா கத்தினுள் இந்திய மாணவர் சங்கத்தினர் வெள்ளியன்று தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து உடனடியாக கல்லூரி  முதல்வர் பேச்சுவார்த்தைக்கு வந்து, மாற்றுச்சான்றிதழை உடனடியாக தருகிறோம் என உறுதியளித்தார். அதன் பேரில் தற்காலிகமாக தர்ணா விலக்கிக் கொள்ளப்பட்டது. முன்னதாக, இந்த போராட்டத்தில் மாணவர் சங்க மாவட்ட நிர்வாகி அபிராமி, வாலிபர் சங்க துணை ஒருங்கிணைப்பா ளர் கோகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.