tamilnadu

img

சிலம்பம் சுற்றி மாணவர்கள் உலக சாதனை

சிலம்பம் சுற்றி மாணவர்கள் உலக சாதனை

சேலம், ஆக.31- விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து இரண்டு மணி  நேரம் இடைவிடாமல் 250 மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றி  உலக சாதனை படைத்தனர். சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆலச்சம் பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில், தனியார்  ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நோபல் உலக சாதனை  நிகழ்ச்சி நடைபெற்றது. போதைப்பொருள் குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையிலும், விளையாட்டின் முக்கியத் துவம் குறித்தும் இரண்டு மணி நேரம் ஒரே இடத்தில் இடை விடாமல் 250 மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றி சாதனை  படைத்தனர். இந்த சாதனையானது நோபல் உலக சாதனை  அங்கீகரித்து, மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கி பாராட்டு  தெரிவிக்கப்பட்டது. ஒரே இடத்தில் மாணவர்கள் இடைவிடா மல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த நிகழ்ச்சி காண்போரை  வியப்படையச் செய்தது.