பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக திருப்பூரில் மாணவர்கள் கையெழுத்து இயக்கம்
திருப்பூர், அக்.7- பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் யூதவெறி பாலஸ்தீன இன அழிப் புப் போரை முடிவுக்குக் கொண்டு வரவும் இந்திய மாணவர் சங்கத்தினர் திருப்பூரில் 7 கல்வி நிலையங்கள் முன்பு கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கையெழுத்திட்டு பாலஸ்தீன மக்களுக்கு தங்கள் ஆதர வையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்த னர். யூதவெறி இஸ்ரேல் அரசு அமெரிக்கப் பின்புல ஆதரவுடன், பாலஸ்தீன மக்களை அழித்தொழித்து காஸாவை ஆக்கிரமிக்க, சர்வதேச சட்டங்களை காலில் போட்டு மிதித்து தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரு கிறது. இதில் ஆயிரக்கணக்கான ஒன்றுமறி யாத குழந்தைகள், பெண்கள் என லட்சக்க ணக்கானோர் பலியாகியுள்ளனர். மேலும், உணவு, மருத்து உள்ளிட்ட வைகள்கூட பாலஸ்தீன மக்களுக்கு கிடைக்க விடாமல் இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த இனப் படுகொலையை கண்டித்து உலகம் முழுவ தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின் றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட் டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் அவி நாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை அரசு கலை, அறிவியல் கல்லூரிகள். திருப்பூர் சிக்கண்ணா மற்றும் எல்.ஆர்.ஜி.மகளிர் அரசு கலை, அறிவியல் கல்லூரி, தாராபுரம் பாலிடெக்னிக் ஆகிய ஏழு கல்வி நிறுவனங்க ளில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் கையெழுத்திட்டு பாலஸ்தீன மக்களுக்கு தங்கள் ஒருமைப்பாட்டையும், ஆதரவையும் தெரிவித்தனர். இந்த கையெழுத்து இயக்கத்தில், மாண வர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் விமல் ராஜ், மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாவட்டத் துணைத் தலைவர்கள் காதர், பிர வீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சுஜிதா, புனிதன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கண்ணன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் உதயசங்கர், அறவாழி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
