tamilnadu

img

நீட் எதிர்ப்பு போராளி அனிதாவுக்கு திருப்பூரில் மாணாக்கர்கள் அஞ்சலி

நீட் எதிர்ப்பு போராளி அனிதாவுக்கு திருப்பூரில் மாணாக்கர்கள் அஞ்சலி

திருப்பூர், செப். 1 – நீட் எதிர்ப்புப் போராளி அனிதாவின் நினைவு தினத்தை  முன்னிட்டு திங்களன்று திருப்பூர் எல்ஆர்ஜி மகளிர் அரசுக்  கல்லூரி, முதலிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி,  காளிவேலம்பட்டி அரசு பள்ளி, ஆகிய இடங்களில் அனிதா வின் புகைப்படம் வைத்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இங்கு நீட், கியூட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு எதிராக  உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மாவட்டத்தலைவர் விமல்ராஜ், மாவட்ட துணை நிர்வாகிகள் சுஜிதா, புனிதன்,  பிரவீன்குமார், நிஷாந்தினி மற்றும் எல்ஆர்ஜி கிளை  பிரியதர்ஷினி, திருவேணி, சிட்கோ கிளை சரண், மாடசாமி  உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்.