tamilnadu

img

போதை ஆசாமிகளின் தொல்லை: மாணவர்கள் அச்சம்

போதை ஆசாமிகளின் தொல்லை: மாணவர்கள் அச்சம்

பொள்ளாச்சி, செப்.17- பொள்ளாச்சி அருகேயுள்ள வேட் டைக்காரன்புதூர் ஸ்ரீ அழுக்கு சாமியார் கோவில் தெருவில் அமைந்துள்ள கலா மண்டபத்தில் தினமும் மது அருந்து பவர்களின் அட்டகாசம் அதிகரித்துள் ளது. இதனால் அருகில் உள்ள கிளை நூலகத்திற்கு வருபவர்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். வேட்டைக்காரன்புதூர் கிளை நூல கம், அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பல ருக்கும் பயனுள்ளதாக இருந்து வரு கிறது. ஆனால், நூலகத்திற்கு அருகி லேயே உள்ள கலா மண்டபம் தற்போது பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல் லாமல் உள்ளது. இந்த இடத்தைப் பயன் படுத்தி தினமும் மது அருந்துபவர்கள் கூச்சலிடுவதும், சண்டையிட்டுக் கொள் வதும் வாடிக்கையாகிவிட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில், கலா மண்டபத்தின் அருகிலேயே தினமும் காலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுகிறது. கலா  மண்டபத்தின் மோசமான நிலையைக்  கருத்தில் கொண்டு, மது அருந்துபவர் கள் அதைப் பயன்படுத்தி வருகின்ற னர். குறிப்பாக, நூலகத்திற்கு வந்து  படிக்கும் இளைஞர்கள், கலா மண்ட பத்திற்குள் மது அருந்துபவர்களின் சத்தம் காரணமாக பெரும் இடையூறு களைச் சந்திக்கின்றனர். இதன்காரணமாக, தற்போது நூலத் திற்கு வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. இது தொடர்பாகப் பலமுறை காவல்துறை யினரிடம் புகார் அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. இப் போதாவது, காவல்துறையினர், கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வ தைத் தடுத்திடவும், கலா மண்டபத் தில் மது அருந்துபவர்களை கண்கா ணித்து அவர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.