tamilnadu

img

வன எல்லைகளில் உருக்கு கம்பிவேலி: நீதிபதிகள் ஆய்வு

வன எல்லைகளில் உருக்கு கம்பிவேலி: நீதிபதிகள் ஆய்வு

மேட்டுப்பாளையம், செப்.5- கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் யானைகளின் வழித் தட பாதை மற்றும் வன எல்லை களை தாண்டி யானைகள் வர வாய்ப்புள்ள இடங்கள் மற்றும் உருக்கு கம்பி வேலி அமைப்பது தொடர்பாக சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி.பரத சக்கிரவர்த்தி ஆகியோர் வெள்ளியன்று நேரில் ஆய்வு செய்து, வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். கோவை வனச்சரகத்தில் அட் டுக்கல் முதல் பொம்மணம்பாளை யம் வரை 5 கிலோ மீட்டர் தொலை விற்கும் போளுவாம்பட்டி வனச்சர கத்திற்குட்பட்ட பெரும்பள்ளம் முதல் தேவராயபுரம் வரை 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு உருக்கு கம்பி வேலி அமைக்கும் பணியை வனத்துறை துவங்கியது. இது யானைகளுக்கு பாதிப்பு ஏற்ப டுத்தும் என எதிர்ப்பு தெரிவித்து விலங்கின ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்த்தார். இவ்வழக்கு நீதிபதிகள் நீதிபதி சதீஷ்குமார் மற்றும் பரத சக்கிரவர்த்தி ஆகி யோர் அடங்கிய அமர்வுக்கு முன்  விசாரணைக்கு வந்தது.இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வேலி அமைக்கும் இடங்களை நேரில் ஆய்வு செய்வதாக தெரி வித்தனர். இதனடிப்படையில், வெள்ளி யன்று காட்டு யானைகள் ஊருக் குள் நுழைவதை தடுக்க வன எல் லையில் உருக்கு கம்பி வேலி அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகள் கொண்ட குழுவி னர் வியாழனன்று இரவு சென்னை யில் இருந்து மேட்டுப்பாளையம் வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு  முன்பு மேட்டுப்பாளையம் வந்த நீதிபதி சதீஷ்குமார் தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற குழு வினர் மேட்டுப்பாளையம் பகு தியில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளை ஆய்வு செய்து, கொடுத்த உத்திரவுகள் பின்பற்றப் பட்டுள்ளதா என முதலில் வனத்தை ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பின்புற முள்ள யானை தடுப்பு அகழிகளை ஆய்வு செய்தனர். இதன்பின் கல்லார் பகுதியில் வனத்தை ஒட்டியுள்ள சச்சிதா னந்தா ஜோதி நிகேதன் என்னும் தனி யார் பள்ளியின் பின்புற வனப்ப குதிகளை ஆய்வு செய்து வனத் திற்கும் பள்ளி சுற்றுச்சுவருக்கும் இடைப்பட்ட இடத்தை யானைக ளுக்கு தொல்லை ஏற்படாத வகை யில் நிலத்தை மேடு பள்ளங்களாக இல்லாமல் மட்டமாக மாற்றி அமைக்க உத்திரவிட்டனர். வன எல்லையில் அமைக்கப்பட்டுள்ள யானைகள் தாகம் தீர்க்க கட்டப் பட்டிருந்த தண்ணீர் தொட்டியை பார்வையிட்டனர். இதனையடுத்து, யானைகள் நடமாட்டம் உள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணையை ஆய்வு செய்த னர். அப்போது கல்லார் பழப்பண் ணையில் ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வின் போது அங்கிருந்த சிறு வர் பூங்கா மற்றும் கழிப்பிட கட்டி டத்தை அகற்ற சொல்லியிருந்தது நடைமுறை படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர்.மேலும், தோட்டக்கலை மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி சில ஆலோசனைகளை வழங்கினர். பின்னர் மதியம் ஆய்வு பணியை தொடர கோவைக்கு புறப்பட்டு சென்றனர்.  முன்னதாக, கள ஆய்வு செய்ய  வந்த நீதிபதிகளுடன் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், தலைமை வன பாதுகாவலர் சீனி வாச ரெட்டி, வன உயிரின காப்பா ளர் ராகேஷ்குமார் டோக்ரா, ஆனை மலை புலிகள் காப்பக கள இயக்கு னர் வெங்கடேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட வன அலுவர் ஜெயராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர்  உடனிருந்தனர்.