மாநில அளவிலான நீச்சல் போட்டி
கோவை, ஜூலை 7- கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில், ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கோவை பிரைம் ஸ்போர்ட்ஸ் அமைப்பு சார்பில், மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கிடையேயான நீச்சல் போட்டி, கோவை கே.என்.ஜி. புதூர் பகுதியிலுள்ள லைஃப் ஸ்ப்ரிங் விளையாட்டு அரங்கத்தில் சனியன்று நடை பெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாகப்பட்டி னம், மதுரை, திண்டுக்கல், சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 25 மீட்டர், 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர் தூரங்களுக்கு பட்டர்பிளை, ப்ரீ ஸ்டைல், பிரஸ்ட் ஸ்ட்ரோக், உள்ளிட்ட பிரிவுகளில் ஆண், பெண் இருபால ருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வயது வாரியாக கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மூத்த நீச்சல் பயிற்சியாளர் ரகு போஸ் செய்திருந்தார்.