tamilnadu

img

இன்சூரன்ஸ் ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவக்கிடுக!

கோவை, ஜன. 28 - நீண்ட காலமாக நிலுவை யில் உள்ள அரசுடைமை பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஒன்றிய நிதி அமைச்சர் உடன டியாக தலையிட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,  அரசுடைமை  பொது  இன்சூரன்ஸ்  துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊதிய உயர்வு பிரச்சனை க்கு தீர்வு காணப்படாமல்  கடந்த  54  மாதங் களாக  நிலுவையில்  உள்ளது.  

அரசுடை மை பொது இன்சூரன்சில் பணிபுரி யும் ஊழியர்களுக்கும், அதிகாரி களுக்கும் கடந்த 01.08.2017 முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். தனி யார் இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் போல அல்லாமல் நாட்டின் மூலை முடுக்கெல் லாம் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங் கள் தங்களது அலுவலகங்களைத் திறந்து பொதுமக்களுக்கு மிகச் சிறப்பான சேவை யாற்றி வருகின்றன என இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை கட்டுப்பாட்டு ஆணை யத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இன்சூரன்ஸ் துறை எந்த நோக்கத் திற்காக தேசவுடைமையாக்கப்பட்டதோ அந்த நோக்கங்கள் சிறப்பான முறை யில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அரசுடமை பொது இன்சூரன்ஸ் ஊழியர்களும், அதி காரிகளும் தங்களது உயிரைப் பணயம் வைத்து பொதுமக் களுக்கு சிறப்பான சேவை யாற்றி வருகின்றனர் .

இப்படி சிறப்பான சேவையாற்றி வரும் அரசு பொது இன்சூரன்ஸ்துறை ஊழியர் களும் அதிகாரிகளும் ஒரு சிறப்பான ஊதிய உயர்வுக்கு தகுதியானவர்களே என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2021ஆம் நிதியாண்டில் அரசுடைமை பொது இன்சூரன்ஸ் நான்கு கம்பெனி களும் ரூ.72 ஆயிரம்  கோடியை பிரீமிய வருவாயை திரட்டியுள்ளன.  கொரோனா பெருந்தொற்று காலத்தில் இத்தகைய வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. 2012 முதல் 2017 வரையிலான கால கட்டத்தில்  பங்கு ஆதாயமாக ரூ.3 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசுக்கு அளித்தன. எனவே, சிறப்பான சேவையாற்றி வரும் அரசுடைமை பொது இன்சூரன்ஸ் ஊழி யர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். இது குறித்து நிதித்துறை அமைச்சகத்திற்கு உரிய அறி வுரையை வழங்க வேண்டும்.  இவ்வாறு பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

;