tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

இன்று மூன்று மையங்களில்  உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருப்பூர், அக்.22- திருப்பூர் மாவட்டத்தில் நான்காம் கட்டமாக உங்களுடன்  ஸ்டாலின் திட்ட முகாம் வியாழன் என்று நடைபெறுகிறது. காங்கயம் ஊராட்சி ஒன்றியம் பழையகோட்டை ஊராட் சிக்கு, நத்தக்காடையூர் கரிய காளியம்மன் மண்டபத்தி லும், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், கணபதிபாளை யம், ராகல்பாவி ஆகிய ஊராட்சிகளுக்கு முக்கோணம், ஸ்ரீ  கிருஷ்ணா காணம் திருமண மண்டபத்திலும்,  ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், அணைப்பாளையம் ஊராட்சிக்கு ஊத் துக்குளி ரயில் நிலையம், பஞ்சாயத்து யூனியன் திருமண  மண்டபத்திலும்,  நடைபெறவுள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு உரிய  ஆவணங்களுடன் தங்கள் மனுக்களை வழங்கி பயன்பெறும்  படி மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே கூறியுள்ளார்.

நீரை காய்ச்சி குடிக்க ஆணையர் அறிவுறுத்தல்  

திருப்பூர், அக்.22 - திருப்பூர் மாநகராட்சிக்கு 3-வது குடிநீர் திட்டம் மூலமாக  குடிநீர் பெறப்பட்டு வருகிறது. இக்குடிநீர் திட்ட நிறுவனத்தி னர் பராமரிப்பு பணி காரணமாக வியாழனன்று 24 மணி நேரம்  குடிநீர் வினியோகத்தை நிறுத்துவதாக தெரிவித்துள்ளனர்.  3-வது குடிநீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் குடிநீர் முற்றிலும் தடைபடுவதால் பகிர்மானத்தில் குடிநீர் விநியோ கம் ஒரு நாள் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும், வடகிழக்கு  பருவமழை காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை  பெய்ததால் பவானி ஆற்றில் வெள்ள நீர் அதிகமாக செல்கி றது. தற்போது மழைக் காலமாக இருப்பதாலும் ஆற்றின் வெள்ள நீர் அதிகமாக செல்வதாலும், பாதுகாப்பு நலன் கருதி  பொதுமக்கள் குடிநீரினை நன்கு காய்ச்சி பருகுமாறும், பொது மக்கள் குடிநீரினை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்த  வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் எம்.பி.அமித் தெரி வித்துள்ளார்.

இன்று தென்னை விவசாயிகள் கூட்டம்

உடுமலை, அக்.22- உடுமலைப்பேட்டை வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் தென்னை விவசாயிகள்  மற்றும் (KERAFED) கேரளா  தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கும், விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வது தொடர்பாக வாங்குபவர் விற்பவர் கூட்டம் இன்று (23.10.25)  காலை 10 மணிக்கு உடுமலைப்பேட்டை வேளாண்மை விரி வாக்க மையத்தில் ‌நடைபெற உள்ளது. எனவே தென்னை விவ சாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

108 சேவை மையத்திற்கு  உதவி கேட்டு 259 அழைப்புகள்

திருப்பூர், அக்.22- திருப்பூர் மாவட்டத்தில் அக்டோபர் 19 ஆம் தேதி இரவு முதல் தீபாவளி பண்டிகையான 20 ஆம் தேதி இரவு வரை  108 ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு 259 அழைப்புகள் வந் துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 20  ஆம் தேதி திருப்பூரில் விபத்து ஏற்படக் கூடிய பகுதிகள் மற்றும்  ஹாட்ஸ்பாட் பகுதிகள் கண்டறியப்பட்டு ஆம்புலன்ஸ் வாக னங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. இவைகளில் உட னடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவ உதவியாள ரும் பணியில் இருந்தனர். இந்நிலையில் கடந்த 19 ஆம்  தேதி இரவு முதல் தீபாவளி பண்டிகையான 20 ஆம் தேதி  இரவு வரை திருப்பூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை  மையத்திற்கு 259 அழைப்புகள் வரப்பட்டுள்ளன. இவைகளில்  வாகன விபத்துகளால் பாதிக்கப்பட்டதாக அதிகபட்சமாக 110  அழைப்புகள், அடிதடி பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதாக 20 அழைப்புகள், தீ விபத்து காயம் தொடர்பாக ஒரு அழைப்பு உள்ளிட்ட பல்வேறு அவசர தேவைக்காக 259 அழைப் புகள் பெறப்பட்டுள்ளன. அழைப்புகள் பெறப்பட்டவுடன் உட னடியாக சம்பவ இடத்திற்கு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தும், மேல் சிகிச்சை தேவைப்படுபவர்கள் அரசு மருத்து வமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சாதாரண  நாட்களில் சராசரியாக 124 அழைப்புகள் வரை பெறும் நிலை யில், தீபாவளி நாளில் அதிகபட்சமாக 259 அழைப்புகள் பெறப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நகரங்களை இணைத்து திருப்பூருக்கு ‘மெமு’ ரயில் வசதி: ரைசிங் சங்கம் கோரிக்கை

திருப்பூர் ,அக்.22 - திருப்பூர் வந்து செல்ல முக்கிய தொழில் நகரங்களை இணைக்கும் வகையில் ‘மெமு’ மின் ரயில் வச தியை மத்திய அரசு உருவாக்கித் தர  வேண்டும் என ரைசிங் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.   இதுகுறித்து திருப்பூர் ரைசிங் உரி மையாளர்கள் சங்க தலைவர் கருணாம் பிகா எம்.வி.ராமசாமி கூறியதாவது: திருப்பூரின் நலன் காக்கவும், தொழில் நலன், தொழிலாளர் நலன் சிறக்கவும், தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டு, எதிர்வரும் காலங்களில் திருப்பூரின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம்  பெருகி  வளரவும், தற்போதைய நிலையில்  திருப்பூருக்கு பல்வேறு அடிப்படை கட் டமைப்பு வசதிகள் தேவைப்படுகின் றன. உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சரக்கு களை நகரப்பகுதியில் இருந்து துறை முகங்கள் மற்றும் வெளிமாநிலங்க ளுக்கு எளிதாக கொண்டு செல்லும் வகையில், தொலைநோக்குப் பார்வை யோடு திட்டமிட்டு, எதிர்கால தேவைக் கேற்ற வகையில் புதிய சாலை வசதிகள்  திருப்பூருக்கு அத்தியாவசியமாக உள் ளது. திருப்பூரைப் பொருத்தவரை, இங் குள்ள தொழிலாளர்களில் பெரும்பா லானோர் வெளி மாநில, வெளிமாவட் டப் பகுதிகளை சேர்ந்தவர்கள். இங்குள்ள தொழில் நிறுவனங்கள் சார் பில் ஆங்காங்கே குடியிருக்க வசதிகள்  செய்யப்பட்டு வந்தாலும், அரசு சார்பில்,  தொழிலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு வசதிகள் உருவாக்கி கொடுக்கப்பட்டால், எளிதாக திருப்பூ ரில் குடியிருக்க முடியும் என்ற எண் ணம் உருவாகும். தொழிலாளர்களுக் கும் தரமான, எளிதான, குறைவான வாட கையில் குடியிருப்பு வசதிகள் கிடைக் கும். பெரும்பாலான தொழிலாளர்கள் இன்றைக்கும் கூடுதல் வாடகையில்,  அடிப்படை வசதிகளற்ற கட்டிடங்களில் தான் வாழ்க்கையை நடத்தி வருகின்ற னர். தொழிலாளர்களின் வாழ்வாதாரத் தின் மீது அக்கறை கொண்டு ஒன்றிய  அரசு, இந்த குடியிருப்பு விஷயத்தை பரி சீலினை செய்ய வேண்டுகிறோம்.   மேலும் திருப்பூருக்கு தினமும் பல் லாயிரக்கணக்கான வர்த்தகர்கள், பொது மக்கள், தொழில் முனைவோர் கள் வந்து செல்கின்றனர். அதில்  ரயில் மூலம் வேலைக்கு வருபவர்க ளின் எண்ணிக்கை மட்டும் பல ஆயிரக் களை தாண்டும். காலை மற்றும் மாலை  நேரங்களில் திருப்பூருக்கு என பயணி கள் ரயில் இருந்தாலும், நெரிசலில் பய ணிக்க வேண்டியிருக்கிறது. இதனால் பெண்கள், வயதானவர்கள் மிகவும் சிர மப்படுகினறனர்.  சேலம், ஈரோடு, தாராபுரம், பொள் ளாச்சி, கோவை, மேட்டுப்பாளையம், அவிநாசி பகுதிகளுடன் இணையும் வகையில், திருப்பூர் போன்ற தொழில்  நகரங்கள் பயன் பெறுவதற்கு வசதி யாக ‘மெமு’ மின் ரயில் வசதியை மத் திய அரசு அறிமுகம் செய்தால் மேலும்  பல்லாயிரக்கணக்கானோர் திருப்பூர் வந்து செல்வார்கள். இதனால் வர்த்தக வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

எல்.ஆர்.ஜி கல்லூரி வளாகத்திற்குள்  அரசு பேருந்துகள் வந்து செல்ல ஏற்பாடு

திருப்பூர், அக்.22 - திருப்பூரில் அரசு கல்லூரி மாணவிகளின்  சிரமத்தை போக்கும் வகையில், கல்லூரி  வளாகத்திற்குள் அரசு பேருந்துகள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித் துள்ளனர். திருப்பூர் பல்லடம் சாலை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகே எல்.ஆர்.ஜி மகளிர்  அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.  இந்த கல்லூரியில் 3000க்கும் மேற்பட்ட மாண விகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த சூழ் நிலையில் காலை 9 மணி முதல் மதியம் 2  மணி வரை கல்லூரி  வகுப்புகள் நடைபெற்று  வருகிறது.  திருப்பூர் மாநகர் பகுதிகளில் இருந்தும், பல்லடம், மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவிகள் இந்த கல் லூரியில் கல்வி பயின்று வருகின்றனர்.  பேருந்து பற்றாக்குறை காரணமாக கல்லூரிக்கு வரும் பொழுதும், கல்லூரி முடிந்து வீடுகளுக்கு திரும்பும் போதும் மாண விகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்ற னர்.   இதன் தொடர்ச்சியாக எல்.ஆர்.ஜி  கல்லூரிக்கு வந்த திருப்பூர் தெற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் செல்வராஜ் மற் றும் அரசு போக்குவரத்து துறை அதிகா ரிகள், புதன்கிழமையன்று கல்லூரி நிர்வா கத்தினரை சந்தித்து பேசினர்.  மாணவிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு இனி நாள்தோறும் கல்லூரி வளாகத்திற்கு உள் ளேயே அரசு பேருந்துகள் வந்து மாணவி களை ஏற்றுக்கொண்டு செல்லும் என உறுதி  அளித்தனர். அதற்கு ஏற்ப புதன்கிழமை முதல் கல்லூரி  வளாகத்திற்குள் அரசு பேருந்துகள் வந்து மாணவிகளை ஏற்றுக்கொண்டு பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்றது. முதல்  கட்டமாக பழைய பேருந்து நிலையம் வரை  இயக்கப்படும், அடுத்த கட்டமாக புதிய  பேருந்து நிலையம், கோவில் வழி பேருந்து  நிலையம், பல்லடம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளுக்கு கல்லூரியில் இருந்து  பேருந்துகள் செல்லும் வகையில் ஏற்பாடுகள்  மேற்கொள்ளப்படும், வரும் 27ஆம் தேதி முதல் இனி காலை 8 மணி முதல் பழைய பேருந்து நிலையத்திலிருந்து எல்.ஆர்.ஜி கல் லூரி வளாகத்திற்கு மாணவிகளுக்காக தனி யாக பேருந்து இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டிற்கு மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.