அனுப்பர்பாளையம் மேல்நிலைப் பள்ளியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்
திருப்பூர், ஆக.7 - அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ் நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து முறை நடத்தும் “நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்” சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் பல்வேறு வகை சிறப்பு மருத்துவசேவை கள், புற்று நோய் கண்டறியும் பரிசோதனைகள், முதலமைச் சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குதல், இரத்தப் பரிசோதனை, ஈசிஜி, எக்கோ, எக்ஸ்ரே, சளி பரிசோதனை மற்றும் சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனை கள் செய்யப்படுகிறது. பொது அறுவை, இருதய மருத்துவம், எலும்பியல், நரம்பி யல், தோல், காது மூக்கு, தொண்டை, மகப்பேறு, இயன் முறை, பல், கண், மனநலம், குழந்தைகள் நலம், நுரையீரல், நீரிழிவு நோய், சித்தா, ஆயுஷ் மற்றும் எக்ஸ்ரே மருத்துவ சேவை வழங்கப்படவுள்ளது. மேலும் விரிவான தரவுத் தொகுப்பு, தொடர் கண்காணிப்பு மற்றும் பின் தொடர் சிகிச்சை நடவடிக்கைகள், நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை வாயிலாகக் சேவை அளிக் கப்படும். இரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு, பெண்களுக் கான கருப்பை வாய்ப்புற்று, மார்பக புற்று நோய் ஆகிய வற்றை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள், மருத்துவச் சேவைகள் அளிக்கப்படும். இம்முகாமிற்கு வருபவர்கள் ஆதார் அட்டை மற்றும் அதில் இணைக்கப்பட்ட தொலைபேசியை கட்டாயம் எடுத்து வர வேண்டும். தொழிலாளர் நல அட்டை பெறுவதற்கு ஆதார் அட்டை அதனுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி, குடும்ப அட்டை மற்றும் வருமானச் சான்றிதழ் எடுத்து வரவும். இம்ம ருத்துவ முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் பதிவு செய்யப்படுகிறது. இந்த முகாமில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ள மாநகராட்சி ஆணையாளர் எம்.பி.அமித் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அனைத்து குட்டைகளுக்கு நீர் கொண்டு செல்ல 10 நாட்கள் அவகாசம்
அவிநாசி, ஆக.7- அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் அனைத்து குட்டை களுக்கு நீர் கொண்டு செல்ல 10 நாட்கள் அவகாசம் வழங்கும் படி அரசுத்துறை சார்பில் போராட்டக் குழுவினரிடம் கோரப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் அவிநாசி அத்திக்கடவு திட்டம் மூலம் காளிங்கராயன் பகுதியில் இருந்து மூன்று மாவட்டங்களில் உள்ள குளம் குட்டைகளுக்கு தண் ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாலான குளம் குட்டைகளுக்கு, தண்ணீர் கிடைப்பதில்லை எனக் கூறி, அத்திக்கடவு போராட்ட குழுவினர் அவிநாசி யில் உள்ள அத்திக்கடவு அலுவலகத்தை கடந்த வாரம் முற்றுகையிட்டனர். அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தை யில், 10 நாட்களுக்குள் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அலுவலர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவிநாசியில் அரசு அமைத்துள்ள அத்திக் கடவு அலுவலகத்தில் அத்திக்கடவு போராட்டக் குழுவினரு டன் வியாழனன்று அரசு அலுவலர்கள் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், மீண்டும் 10 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளனர். இதை அவிநாசி அத்திக்கடவு போராட்ட குழு வினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். மீண்டும் இதேநிலை தொடர்ந் தால் போராட்டம் தீவிரமடையும் என்று தெரிவித்துள்ளனர்.
சிறப்பு கைத்தறி கண்காட்சி ஆட்சியர் துவக்கி வைப்பு
திருப்பூர், ஆக.7 - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளா கத்தில் 11 ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு வியா ழனன்று சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சியை ஆட்சியர் மனிஷ் நாரணவரே துவக்கி வைத் தார். மேலும், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைத்திருந்த கைத்தறிக் கண்காட்சியை பார்வை யிட்டார். மேலும், கைத்தறி துறை சார்பில் 6 கைத்தறி நெசவா ளர்களுக்கு நெசவாளர் முதியோர் ஓய்வூதிய ஆணையை யும், 3 கைத்தறி நெசவாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நெசவாளர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணையையும், நெச வாளர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தலா ரூ.50 ஆயிரம் வீதம் 9 நெசவாளர்களுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பிலான கடன் உதவி காசோலையையும் வழங்கினார். நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 8 உறுப்பினர்களுக்கு ரூ.7.28 லட்சம் மதிப்பிலான திட்டத் தொகையினையும், கைத் தறி ஆதரவு திட்டம் 2024-2025 ன் கீழ் தொழில்நுட்ப இனத்தின் கீழ் 134 பயனாளிகளுக்கு தறி உபகரணங்களையும் வழங்கி னார். இக்கண்காட்சியில் கைத்தறி துணி ரகங்களுக்கு 20 சத வீதம் தள்ளுபடி வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள் ளது.
ஜல்லிபட்டி அருகில் கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
திருப்பூர், ஆக.7 - திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஜல்லிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வெங்க டாபுரம் கிராமத்தின் அருகில் சின்ன குமாரபா ளையம் வருவாய் கிராமம் சீதாமடை குட்டை யில் கடந்த ஒரு மாத காலமாக சட்டவிரோ தமாக ஏராளமான லாரிகள் ஜேசிபி இயந்தி ரங்களை பயன்படுத்தி 4 ஆயிரத்திற்கும் மேற் பட்ட லோடுகள் மண், சரளை மண் குட்டை யில் இருந்து திருடப்பட்டுள்ளது. தொடர்ந்து இரவு பகலாக மிக ஆழமாக தோண்டப்பட்டு மண் திருடப்பட்டு வருகிறது. குட்டை பிரம்மாண்டமான குழிகளாக மாறி மிக மோசமாக சேதடைந்துள்ளது. அந்த பாதையெங்கும் சேறும் சகதியுமாய் மாறி கடுமையாக சேதமடைந்துள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் கிராம அலுவலருக்கு தக வல் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கை யும் எடுக்கவில்லை. வசதி படைத்தவர்க ளும், அதிகார வர்க்கத்தினரும் இணைந்து நடத்தும் மண் திருட்டால் இயற்கை வளம் தினந்தோறும் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கொள்ளையடிக்கப்பட்டு நாசமாக்கப்படுகி றது. எனவே இயற்கை வளங்களான குட்டை மண்ணை அள்ளிக் கொண்டு இருக்கும் நபர் கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து முழு மையான மண் திருட்டு கும்பல்களை கைது செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தை யும், வருவாய் துறையையும் தமிழக அரசை யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடு மலை ஒன்றிய குழுவின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன் கூறியுள்ளார்.
பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலம் தாழ்த்தாமல் ஊதியம் வழங்க வலியுறுத்தல்
திருப்பூர், ஆக.7- திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிக ளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்க ளுக்கு ஊதியம் கடந்த இரண்டு மாதமாக வழங்கப்படாமல் உள்ளது. எனவே உடனடி யாக ஊதியம் வழங்க மாநகராட்சி ஆணைய ரிடம் வியாழனன்று, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பூர் தெற்கு மாநகர கிளை நிர்வாகிகள் மனு அளித்தனர். பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் தூய்மைப்பணி செய்பவர்களுக்கு மாத இறுதி நாளில் ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்துவதால் அவர்கள் தொடர்ச்சியாக பணிக்கு வராமல் நின்று விடும் சூழல் ஏற்படு கிறது. எனவே மாத இறுதிநாளில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண் டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர். சங்கத் தின் தலைவர் சங்கர், செயலாளர் கனகராஜா, பொருளாளர் பிரமா ஆகியோர் பங்கேற்ற னர்.
நீட் இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்ற 27 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர்
திருப்பூர், ஆக.7- அரசு சார்பில் பள்ளிகளில் வழங்கிய நீட் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 27 மாணவர்கள் மருத் துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக ளுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படு கிறது. அதன்படி 2025-26 ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே 4 ஆம் தேதி நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட் டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள் ளிகளைச் சேர்ந்த 354 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியானது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து நீட் தேர்வு எழு திய 354 மாணவ மாணவியர்களின் 163 பேர் தேர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து நீட் தேர்வை எழுதி 7.5% இட ஒதுக்கீட்டில் இம்மா வட்டத்தில் 27 மாணவர்கள் மருத்துவ கலந் தாய்வு மூலம் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். இவர்களில் 21 பேர் எம்பிபிஎஸ் மருத்து வம், 6 பேர் பல் மருத்துவத்தை தேர்வு செய் துள்ளனர். மேலும் 10 பேருக்கு பல் மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைத்தும் வேறு துறை களை தேர்வு செய்வதற்காக இதில் சேர வில்லை. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் வராத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக ளில் பயின்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 9 மாணவர்கள் பொது கலந்தாய்வில் கலந்து கொண்டு தங்களுக்கான கல்லூரிகளை தேர்வு செய்ய உள்ளனர். அரசு சார்பில் பள் ளிகளிலேயே வழங்கிய நீட் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றோர் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக் கது.