tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

எஸ்.ஐ. பணித் தேர்வுக்கு  திருப்பூரில் மாதிரி தேர்வுகள்

திருப்பூர், அக்.17 -  தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம்  காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான 1299 காலிப்  பணியிடங்களுக்கும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடி யினருக்கான 53 பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கும் டிசம்பர் 21ஆம் தேதி தேர்வு நடைபெறும் என  அறிவிக்கப்பட் டுள்ளது. இந்த தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகள் திருப்பூர்  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்  மையத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் (அக்டோபர் 22, 29, நவம்பர் 5, 12, 19, 26, டிசம்பர் 3, 10, 17 ஆகிய தேதிகளில்)  மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும். திருப்பூர்  மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத தயாராகி வரும் மாணவர்கள் இம்மாதிரித் தேர்வு களில் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம். திருப்பூர் மாவட்ட  வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மனிஷ்  நாரணவரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

குடிநீர் குழாய் பதிக்க சாலையை சேதப்படுத்தியவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்

திருப்பூர், அக். 17 - திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் 16 ஆவது  வார்டு சொர்ணபுரி லே அவுட் 5வது வீதியில் ஆர்.அன்பழகன்  என்பவர், மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல்  தக வல் ஏதும் கொடுக்காமல், தன்னிச்சையாக செயல்பட்டு, மாந கராட்சி சாலையை குழாய் பதிக்க சுமார் 77 மீ நீளத்திற்கு  தோண்டியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மாநக ராட்சி நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்  விதமாக,  திருப்பூர் மாநகராட்சி புதைவடிகால் இணைப்புகளுக்கான துணை விதி 50ன் படி, பொது விதி எண் 16 ன் படியும்   அனுமதி பெறாமல் குழாய் பதிக்க சாலையை சேதப்படுத்தி யதற்கு அபராதத் தொகை ரூ.50ஆயிரம் விதித்துள்ளது. மேலும், 77 மீட்டர் சேதப்படுத்திய சாலையை மூடுவதற்கு,  மறுசீரமைப்புக் கட்டணம் ரூ.25,000/- மும் சேர்த்து மொத்தம் ரூ.75ஆயிரம் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையர் எம்.பி.அமித்  தெரிவித்துள்ளார்.

தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு தயார்

திருப்பூர், அக்.17-     திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்க 10 படுக்கைகளுடன் சிறப்பு பிரிவு, 32 ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஒரு ஸ்கூட்டர்  ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளதாக தெரிக்விக்கப்பட் டுள்ளது. பட்டாசு வெடித்து பாதிப்புக்குள்ளாவோருக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பு வழிமுறை களை பின்பற்ற வேண்டும். சிறுவர் சிறுமியர் பட்டாசு வெடிக் கும்போது பெற்றோர் அருகிலேயே இருக்க வேண்டும். அதிக  ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலான பட்டாசுகளை சிறு வர்கள் கையாளுவதைத் தடுக்க வேண்டும். பட்டாசு வெடித்த வுடன் கைகளில் பட்டாசு மருந்துகள் இருக்கும் நிலையில் திண் பண்டங்களை தொடுவதற்கு முன்பாக கைகளை நன்றாக  கழுவ வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது அருகில் பக்கெட் டில் தண்ணீர், மண் போன்ற தீ தடுப்புப் பொருட்களை வைத்தி ருக்க வேண்டும். காலில் செருப்பு அணியாமல் செல்லக்கூ டாது. தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவம னைக்கு சிகிச்சை மேற்கொள்ள வரலாம். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பார்கள் எனவும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் மண்டல மேலாளர் உதயநிதி மற்றும்  மாவட்ட மேலாளர் மணிவண்ணன் ஆகியோர் கூறுகையில்,  தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருப்பூரில் முக்கிய ஹாட்ஸ் பாட் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. அங்கெல்லாம் பொது மக்களுக்கு விரைந்து சேவை கிடைக்கும் வகையில் 32 ஆம்பு லன்ஸ் வாகனங்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆம்பு லன்ஸ் தயாராக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் தீயணைப்பு சாதனங்கள்,  மீட்பு உபகரணங் கள்,  அவசர மருந்து பொருட்கள் போதுமான அளவில் இருப்பு  வைக்கப்பட்டுள்ளது. 108 அவசர சேவை எண்ணை  தொடர்பு  கொண்டால் உடனடியாக அருகில் உள்ள சேவை மையத் துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து சேவை கிடைக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.