tamilnadu

img

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது

நாமக்கல், ஆக.12- பழங்குடியின கல்லூரி  மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கொல்லி மலை சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை காவல் துறை யினர் செவ்வாயன்று கைது  செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், ஆயில் பட்டியை சேர்ந்த மோகன் குமார் (55) என்பவர், கொல்லிமலை வாழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக கடந்த 6 ஆண்டு களாகப் பணியாற்றி வருகிறார்.  இவர், கடந்த 6 ஆம் தேதி பணி நிமித்தமாக, கொல்லி மலையிலிருந்து ராசிபுரம் நோக்கி சிறப்பு உதவி ஆய்வா ளர் மோகன்குமார் காரில் புறப்பட்டார். அப்போது திண்டுக் கல் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும்,  காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவியாளரின் மாண வியை, ராசிபுரத்தில் அழைத்து சென்று விடுவதாக அவர்  தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவியும், அவரது தந்தையும் காரில் ஏறி வந்தனர். கொல்லிமலை அடி வாரம் முள்ளுக்குறிச்சி பகுதியில் தந்தை இறங்கிவிட, மாணவி மட்டும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளருடன்  காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோகன்குமார், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், வெளியே சொல்லக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அந்த மாணவி பெற்றோரிடம் தகவல்  தெரிவிக்க, நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மோகன்குமார் மீது  புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் நடைபெற்ற விசாரணை யில், மாணவி பாலியல் தொந்தரவுக்கு உள்ளான சம்பவம்  உண்மை என தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் எஸ்.விமலா உத்தரவின்பேரில், செவ் வாயன்று மோகன்குமாரை கைது செய்தனர்.