தனியார் கல்லூரியில் குறும்பட திருவிழா
நாமக்கல், ஆக.23- கேஎஸ்ஆர் கல்லூரியில் நடைபெற்ற குறும்பட திருவிழா வில் பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் காட்சி தொடர்பியல் துறை சார்பில், கேஎஸ்ஆர் டாக்கீஸ் மாநில அளவிலான குறும்பட திருவிழா அண்மையில் நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலை வர் ஆர்.சீனிவாசன், துணைத்தலைவர் கே.எஸ்.சச்சின் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். சிறப்பு அழைப்பாளராக பிரபல திரைப்பட இயக்குநர் பாண்டியராஜ், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ஆர்.வேல்ராஜ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீநிவாஸ் தேவாம்சம் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி நிர்வாக இயக்குநர் வி.மோகன், கல்லூரி முதல்வர்கள், துறைத்தலை வர்கள், பேராசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்ட குறும் படங்கள் பெறப்பட்டு, அவற்றிலிருந்து 12 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது. அவற்றில் சிறந்த மூன்று திரைப்படங்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.