tamilnadu

img

கிடப்பில் போடப்பட்ட நிழற்கூடப் பணிகள்

கிடப்பில் போடப்பட்ட நிழற்கூடப் பணிகள்

நாமக்கல், செப்.5- குமாரபாளையத்தில் நிழற்கூடம் அமைக் கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள தால், பேருந்து பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கத்தேரி பிரிவு மேம்பாலம் பகுதியில் இரு புறமும், பொதுமக்கள் மழையில், வெயி லில் காத்திருந்து பேருந்தில் ஏறியும், இறங்கி யும் வருகின்றனர். இதனால் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையேற்று, கோவை செல்லும் வழியில் நிழற்கூடம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சில மாதங்களாக அப்பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, பாதியில் நிற்கும் பணிகளை விரைந்து முடித்து, நிழற்கூடத்தை பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல, சேலம் செல்லும் பக்கமும்  நிழற்கூடம் அமைக்க வேண்டும். குமாரபா ளையம் நகரில் ராஜம் தியேட்டர், ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு ஆகிய பகுதி களிலும் நிகழ்கூடம் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.