tamilnadu

img

ஆசிரியர் மீது பாலியல் புகார்

ஆசிரியர் மீது பாலியல் புகார்

ஈரோடு, ஜூலை 31- பெருந்துறையில் பள்ளி ஆசிரியர் மீது  பாலியல் புகார் எழுந்த சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுததியுள்ளது. பெருந்துறையில் உள்ள அரசுப்பள்ளி யில், 8 ஆம் வகுப்பு வரை ஆண், பெண் குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்நி லையில் கடந்த ஒரு வாரமாக ஆசிரியர் ஆனந்த் என்பவர் பெண் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து, வியா ழனன்று பெற்றோர்கள் பள்ளியின் முன்பு திரண்டனர். இத்தகவலறிந்து இந்திய மாண வர் சங்க மாவட்டத் தலைவர் த.நவீன், மாநில உதவித் தலைவர் டி.சரவணன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வ நாதன் ஆகியோர் அங்கு சென்று பெற்றோர் களிடம் விசாரித்தனர். இதுகுறித்து மாணவர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், தவறிழைத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் மூலமாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்ற னர். இதற்கிடையில், குழந்தைகள் நலப் பாதுகாப்பு அமைப்பின் மூலமாக உரிய விசா ரணை மேற்கொண்டு சட்டபூர்வமாக நடவ டிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் மற்றும் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய கவிதை பயிலரங்கம் புதனன்று, அக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் வெ.மைதிலி, கவிஞர் சுடர்விழி, ஆங்கிலத் துறை பேராசிரியர் கு.இலக்கியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் தமுஎகச மாவட்டத் தலைவர் தி.மணி, மாவட்டச் செயலாளர் அ.கரீம், மாவட்ட;ககுழு நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.