மக்களின் எதிர்ப்பை மீறி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம்
தருமபுரி, செப்.29- மக்களின் எதிர்ப்பை மீறி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதாக குற்றம்சாட்டி, காந்தி பாளையம் கிராம மக்கள் தரும புரி ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை ஊராட்சிக்குட்பட்டது காந்திப்பாளை யம் கிராமம். இங்கு ஏற்கனவே இயங்கி வரும் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையத்தால் பல்வேறு இன் னல்களுக்கு இம்மக்கள் ஆளாகி வரு கின்றனர். இந்நிலையில் அதே பகுதி யில் புதிதாக ஒரு சுத்திகரிப்பு மையம் அமைக்க முயற்சி நடக்கிறது. இந்த திட்டத்தை கைவிடக்கோரி காந்தி பாளையம் மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதிஷிடம் மனு அளித்த னர். இதுகுறித்து அவர்கள் கூறுகை யில், காந்திப்பாளையம் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சுமார் 1200 குடும் பங்கள் வசித்து வருகின்றனர். தருமபுரி நகராட்சியின் கீழ், 2008 ஆம் ஆண்டு காந்திப்பாளையம் கிராமப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் சுத்தி கரிப்பு மையம் அமைக்கப்பட்டு தற் போது இயங்கி வருகிறது. இந்த மையத்தின் பாதாள சாக்கடைக் குழாய் கள் அடிக்கடி உடைந்து, சுத்திகரிக் கப்படாத கழிவுநீர் நேரடியாக கிராமப் பகுதியில் உள்ள ஏரியிலும், மதிகோன் பாளையம் ஆற்றிலும் கலக்கிறது. இதன் காரணமாக, கிராம மக்கள் பல் வேறு வகையான நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்த மாக நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், மீண்டும் ஒரு புதிய பாதாள சாக்கடை சுத்திகரிப்பு மையம் அமைக்க தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுவினரால் ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது. புதிய சுத்தி கரிப்பு மையம் அமைக்கப்பட்டால், கழி வுநீர் சுத்திகரிக்கப்படாமல் கிராம சுற் றுப்பகுதியில் உள்ள ஏரியில் கலந்து மேலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற் படுத்தும். மேலும், கழிவுநீர் தேங்குவ தால் காற்று மாசு ஏற்படுவதுடன், இயற்கை வளம், மண் வளம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும். இதன் விளைவாக, தொற்றுநோய்கள் பரவி கிராம பொது மக்கள், பெரியோர்கள் மற்றும் குழந்தை கள் என அனைவரும் நோய் பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. அதே போல், இப்பகுதியில் வசிக்கும் கால் நடைகளும் நோய் பாதிப்புக்கு உள்ளா கும் நிலை உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தால் பொதுமக்கள் தொடர்ந்து இடையூறுகளையும், பாதிப்புகளை யும் சந்திக்க நேரிடும். எனவே, காந்தி பாளையம் கிராமத்தை மீண்டும் ஆய்வு செய்து, பொது மக்களின் சூழ்நிலையை யும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, கழிவுநீர் பாதாள சாக்கடை திட்டத்தை காந்திபாளையம் பகுதி யில் செயல்படுத்தாமல் இருக்க வேண் டும். பொதுமக்களுக்கு எந்தவித இடை யூறும் இல்லாத வேறு ஒரு இடத்தை தேர்வு செய்து சுத்திகரிப்பு மையத்தை அமைத்து, தங்கள் கிராம மக்களின் அமைதியான வாழ்வுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.
 
                                    