tamilnadu

img

விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணி நீலகிரியில் தீவிரம்

விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு  சீல் வைக்கும் பணி நீலகிரியில் தீவிரம்

உதகை, செப். 15- நீலகிரியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட, அனுமதியற்ற, அல் லது விதிமீறிய கட்டடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித் தார். நீலகிரி மலைப்பகுதியின் சுற் றுச்சூழலைப் பாதுகாக்கவும், நிலச் சரிவு போன்ற பேரிடர்களைத் தடுக் கவும், 1993 ஆம் ஆண்டு மாஸ்டர்  பிளான் என்ற திட்டத்தின்கீழ் சில  விதிமுறைகள் கொண்டுவரப்பட் டன. ஆனால், பல ஆண்டுகளாக இந்த விதிமுறைகளை மீறி, அனு மதியற்ற மற்றும் விதிமீறல் கொண்ட கட்டடங்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வீடுகளை வணிக நோக் கில் விடுதிகளாக மாற்றுதல் மற்றும்  நீர்நிலைகளுக்கு அருகில் கட்டிடங் களை கட்டுதல் போன்றவை சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதி ருப்தியை ஏற்படுத்தியுள்ளன. நீலகிரியில் ஒவ்வொரு ஆண் டும் பருவமழையின் தாக்கம் அதிக மாக இருக்கும். இதனால் நிலச் சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்படு வது வழக்கம். இத்தகைய பேரிடர் களைத் தவிர்க்கும் வகையில், சரி வான நிலப்பரப்புகளில் கட்டிடங் கள் கட்டுவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை மாநில அரசும்,  உயர் நீதிமன்றமும் விதித்துள்ளன. ஆனாலும், சில இடங்களில் நீதி மன்ற உத்தரவுகளை மதிக்காமல் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களின் சீலை அகற்றிவிட்டு மீண்டும் விடுதி களாக நடத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில், சென்னை உயர்  நீதிமன்றம் நீலகிரியில் விதிமீறல்  கட்டிடங்களைக் கண்டறிந்து உடன டியாகச் சீல் வைக்க ஒரு குழுவை அமைக்குமாறு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சி யர் லட்சுமி பவ்யா தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் நாரா யணன் முன்னிலையில், வருவாய்,  நகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச் சிக் கழகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்தக் குழு, விதிமீறல் கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, தொடர்ந்து சீல் வைத்து வருகிறது. இது குறித்து ஆட்சியர் லட்சுமி  பவ்யா கூறுகையில், “நீலகிரியின் சுற்றுசூழலைப் பாதுகாக்கும் நோக் கில், உயர் நீதிமன்றத்தின் உத்தர வுப்படி, மூன்று துறைகளும் இணைந்து விதிமீறல் கட்டிடங் களைக் கண்டறிந்து சீல் வைத்து  வருகின்றன. கடந்த இரண்டு மாதங் களில் மட்டும் சுமார் 25 கட்டிடங் களுக்குச் சீல் வைக்கப்பட்டுள் ளது. இந்த ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெறும். விதி முறைகளை மீறிச் செயல்படும் கட் டிடங்கள் அடையாளம் காணப் பட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகு சீல் வைக்கும் நடவடிக்கை தொடரும்” என்று தெரிவித்தார்.

நீலகிரியில், 800க்கும் மேற் பட்ட சட்டவிரோதமாக கட்டப் பட்ட, அனுமதியற்ற, அல்லது விதிமீறியக் கட்டடங்கள் இருப் பது ஆய்வில் தெரியவந்துள் ளது. இந்த கட்டடங்களுக்கு ‘சீல்’  வைக்கும் நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வருவது குறிப் பிடத்தக்கது.