பல்லி விழுந்த தண்ணீரை குடித்த பள்ளி மாணவர்கள் மயக்கம்
சேலம், ஆக.9- தலைவாசல் அருகே பல்லி விழுந்த நீரை குடித்ததால், மயக்கமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பூமரத்துப் பட்டி முட்டல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏராள மான மாணவர்கள் படித்து வருகின்றனர். அங்குள்ள குடி நீர்த் தொட்டியில் பல்லி விழுந்தது தெரியாமல், மாணவர்கள் நீரை பருகியுள்ளனர். இதனால் அவர்களுக்கு மயக்கம் ஏற் பட்டதையடுத்து, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தலைவாசல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலமானார்
கோவை, ஆக.9– சிஐடியு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்கத்தின் மூத்த தலைவர் சி.ஐயப்பன் (62) உடல்நலக் குறைவின் காரணமாக காலமானார். சிஐடியு குடிநீர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர் தோழர் ஐயப்பன். உடல் நலக்குறைவின் காரணமாக, வெள்ளியன்று கோவை கரும்பாபாளையம் ஸ்ரீ வில்லேஜ் நகரில் உள்ள அவ ரது இல்லத்தில் காலமானார். இவரின் மறைவையடுத்து, சிஐ டியு, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் குடிநீர் வாடிகால் வாரிய தொழிலா ளர் சங்க மூத்த தலைவர் பாலகுமார் தலைமையில் நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாவட் டச் செயலாளர் சி.பத்மநாபன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்க கோவை மண்டலத் தலை வர் பெலிக்ஸ், பொதுச் செயலாளர் ஆர்.சரவணன் உள்ளிட் டோர் பங்கேற்று இரங்கல் உரையாற்றினர்.
19 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
சேலம், ஆக.9- கேரளத்திற்கு கடத்த முயன்ற 19 ஆயி ரம் லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறி முதல் செய்தனர். சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலை யில், காமலாபுரம் விமான நிலையம் அருகே மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் வியாழ னன்று இரவு தீவிர வாகனச் சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது, சேலம் நோக்கி அதிவேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த லாரியில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 550 கேன்கள் இருப்பது தெரியவந்தது. சந்தேகமடைந்த போலீசார், அவற்றை சோதனை செய்த போது, கர்நாடகத்திலிருந்து கேரளத்திற்கு பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து எரிசாரா யத்தை கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் இருந்த 19,250 லிட்டர் எரிசாராயத்தை, லாரியையும் போலீசார் பறி முதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக லாரி ஓட்டுநரான பொள்ளாச்சி வாழைக் கோம்பு பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (47), பாலக்காடு, மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாக்கி மொய்தீன் (54) ஆகியோரை கைது செய்தனர்.