tamilnadu

img

உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.22 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இல்லாத   ரூ.22 லட்சகோவை, செப்.1- மதுக்கரை எட்டிமடை அருகே சோதனை சாவடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.22 லட்சம் பறி முதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நகைக்கடை உரிமை யாளரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற னர். கோவையிலிருந்து, கேரளாவிற்கு அதிக எடையுள்ள கஞ்சா கடத்திச்செல்வதாக, கோவை மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல்  கிடைத்துள்ளது. இதனையடுத்து, மதுக்கரை ஆய்வாளர் நவ நீதகிருஷ்ணன், எஸ்ஐ நசிமா மற்றும் புனித ஆரோக்கிய மேரி, பானுபிரியா உள்ளிட்ட போலீசார், மதுக்கரை எட்டி மடை அருகே உள்ள க.க.சாவடி சோதனைச்சாவடியில் தீவிர  கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது கோவையிலிருந்து கேரளாவை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அதை போலீசார் தடுத்து  நிறுத்தி விசாரித்தனர். அப்போது காருக்குள் ரூபாய் 22  லட்சம் கட்டு கட்டாக இருந்தது தெரிய வந்தது. இது பற்றி  விசாரித்த போது பணத்தைக் கொண்டு வந்தது, கேரளம் மாநிலம், பாலக்காடு மாவட்டம் கேரளாசேரியை சேர்ந்த  ராம்தாஸ் என்பது தெரியவந்தது. அந்த காரில் அவரது  குடும்பத்தினரும் அமர்ந்து இருந்தனர். காரில் வைக்கப் பட்டு இருந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாத தால், அவரிடம் தொடர்ந்து மேற்கொண்டனர். அதில், பாலக் காட்டில் நகைக்கடை வைத்து இருப்பதாகவும், பழைய நகை களை கோவை ராஜ வீதியில் உள்ள கடைகளுக்கு விற்று விட்டு  பணத்துடன் கேரளம் திரும்பியதும் தெரியவந்தது. ஆனால்,  காரில் கொண்டு வந்த ரூபாய் 22 லட்சத்துக்கு எந்த வித  ஆவணங்களும் இல்லாததால் பணத்தை போலீசார் பறி முதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.ம் பறிமுதல்'