டிரோன் மூலம் கண்காணிக்கப்படும் ‘ரோலக்ஸ்’ யானை
கோவை, செப்.13- தொண்டாமுத்தூர் அருகே விவசாய விளை நிலங்களை சேதப்படுத்தி வரும் ரோலக்ஸ் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வரு கின்றனர். கோவை தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ரோலக்ஸ் என்ற காட்டு யானை விவ சாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரு கிறது. இந்நிலையில் இந்த யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்கு இட மாற்றம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் ரோலக்ஸ் காட்டு யானையை பிடிக்கும் பணி கடந்த சில தினங்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு 50 பேர் கொண்ட வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வரு கின்றனர். இந்நிலையில் வெள்ளியன்று இரவு கெம்பனூர் அருகே காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்த கால்நடை மருத்துவர் குழுவினர் மற்றும் வனத்துறையினர் ஆயத்த மான நிலையில், திடீரென யானை வனப்பகுதிக்குள் புகுந்தது. இதையடுத்து டிரோன் கேமரா மூலம் ரோலக்ஸ் யானை எங்கு உள்ளது என்பது கண்டறியும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் நான்கு குழுவாக பிரிந்து யானையை கண்கா ணித்து வருகின்றனர். இரு நாட்களில் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி அழைத்துச் செல்ல உள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அணைகள் நிலவரம்
(சனிக்கிழமை) மேட்டூர் அணை நீர்மட்டம்:119/120அடி நீர்வரத்து:13862கனஅடி நீர்திறப்பு:15800கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:71.82/72அடி நீர்வரத்து:1123கனஅடி நீர்திறப்பு:990கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:160.29/160அடி நீர்வரத்து:587.93கனஅடி நீர்திறப்பு:547.43கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:119.30/120அடி நீர்வரத்து:311கனஅடி நீர்திறப்பு:311கனஅடி