ஊத்துக்குளி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்
திருப்பூர், ஆக. 29 - ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், சர்க்கார் காத் தாங்கண்ணி ஊராட்சி பாப் பம்பாளையத்தில் வெள்ளி யன்று காலை குடிநீர் கோரி பொது மக்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர். ஆற்றுக் குடிநீர் வந்து பத்து நாட்களுக்கு மேலா னதைக் கண்டித்தும், உடனே குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி யும் பாப்பம்பாளையம் பொதுமக்கள் இந்த மறியல் போராட்டத்தை நடத்தினர். அவ்வ ழியே வந்த அரசுப் பேருந்தை வழிமறித்து குடங்களை வைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி னர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த ஊத் துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சரவணன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையில், உடனடியாக ஆற்றுக் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து மறி யல் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஊர் பொதுமக்கள் சார்பாக இந்த பேச்சு வார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஊத்துக்குளி தாலுகா குழு உறுப்பினர் கள் கை.குழந்தைசாமி, ஆர்.மணியன், இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தாலுகா தலைவர் லெனின் மற்றும் தாலுகா பொரு ளாளர் நாகராஜ், மாதர் சங்கத்தைச் சேர்ந்த செல்வி, தெய்வானை, பாப்பம்பாளையம் கிளைச் செயலாளர் பி.சுப்பிரமணி மற்றும் எம்.மணி ஆகியோர் உடனிருந்தனர்.