தெருவிளக்கு அமைத்துத்தரக்கோரி சாலை மறியல்
நாமக்கல், ஜூலை 8- அடிக்கடி விபத்துகள் நடைபெறும் நெடுஞ்சாலையில், வேகத்தடை மற் றும் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த அணைப்பாளையம் புறவழிச் சாலை அருகே உள்ள பனங்காடு பகுதி யில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் புதிதாக அமைக்கப் பட்ட நாமக்கல் – திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதி வேகமாக செல்வதாகவும், அடிக்கடி விபத்து நடைபெறுவதாகக்கூறி, வேகத் தடை அமைத்து தரக்கோரி கடந்த ஒரு வருடமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், எவ் வித நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில், திங்களன்று இரவு அப்பகு தியைச் சேர்ந்தவர் இருசக்கர வாகனர் தில் சென்றபோது, அடையாளம் தெரி யாத கார் மோதியதில், காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரி வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத னால் ஆவேசமடைந்த அப்பகுதி பொது மக்கள், வேகத்தடை மற்றும் புறவழிச் சாலையில் தெருவிளக்குகள் அமைத் துத்தர வேண்டும் என வலியுறுத்தி மரக்கிளைகளை சாலையின் நடுவில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த புதுச்சத்திரம் காவல் ஆய் வாளர் கோமதி தலைமையிலான போலீ சார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன்பேரில் பொதுமக் கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.