ஜாப் ஒர்க்கிற்கு உயர்த்தப்பட் 18 சதவிகித ஜிஎஸ்டி-யை திரும்பப்பெறுக
கோவை எம்எஸ்எம்இ பொதுக்குழு வேண்டுகோள்
கோவை, செப்.28- சிறு, குறு தொழில் நிறுவனங்க ளின் ஜாப் ஒர்க் பணிகளுக்கு 12 சத விகிதமாக இருந்த ஜிஎஸ்டி-யை 18 சதவிகிதமாக உயர்த்தியதை திரும்பப்பெற வேண்டும் என எம் எஸ்எம்இ அசோசியேசன் வலியு றுத்தியுள்ளது. கோவை எம்எஸ்எம்இ அசோசி யேசன்-னின் முதலாவது பொதுக் குழு கூட்டம் மற்றும் கருத்த ரங்கம், பீளமேட்டில் ஞாயிறன்று அமைப்பின் தலைவர் த.மணி தலைமையில் நடைபெற்றது. கோவை மாவட்ட தொழில் மையத் தின் பொதுமேலாளர் பி.சண்முக சிவா, சிறு குறு தொழில் முனை வோருக்கான ஒன்றிய, மாநில அரசு கள் வழங்கும் கடன் வசதிகள் வட்டி சலுகைகள் மானியங்கள் பற்றிய முக்கிய திட்டங்களை விவரித்தார். தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர் கள் மாவட்ட தொழில் மையத்தை அனுகினால் உரிய வழிகாட்டுதல் அளிப்போம். உங்களுடன் ஸ்டாலின் முகாமில், தொழில் முனைவோர் அல்லது தொழில் துவங்க விருப்பம் உள்ளவர்கள் இந்த முகாம்களில் பங்கேற்று மனுக்களை வழங்கலாம். இம் மனுக்கள் மீது உடனுக்குடன் கடன் வசதிகள் செய்யப்பட்டு வரு கின்றன. தற்போதைய தொழில் மைய இணைய சேவை பயன்ப டுத்துவோருக்கு ஏதுவாக எளிய முறையில் வடிவமைக்கப்பட்டுள் ளது. மேலும், வருகிற அக்.9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கோவை கொடிசியாவில் உலக தொழில் முத லீட்டார்கள் மாநாடு நடைபெறு கிறது. 20க்கும் மேற்பட்ட நாடுகள், மாநில முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதன் மூலம் கோவையில் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்க வாய்ப்பினை ஏற்படுத்தும், என் றார். இதைத்தொடர்ந்து, வணிக வரி ஆலோசகர் எஸ்.ராஜேந்திரன், ஜிஎஸ்டி-யின் சட்டப் பிரச்சனை களையும், சிறு குறு தொழில் முனை வோர் நடைமுறையில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளையும் முன்வைத்து கருத்துரையாற்றி னார். அப்போது, 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி-யின் வழிகாட்டுதல்கள் முழுமை யாக தொழில் முனைவோருக்கு சென்றடையாததால் ஏராளமான அபராத அறிவிப்புகள் தற்போது விதிக்கப்பட்டு வருகின்றன, குறிப் பாக, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு களில் மாதந்தர அறிக்கையில் விடு பட்ட ரூ.100க்கு தற்போது குறைந் தபட்சமாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அறிவிப்பும் வங்கி கணக்கிலிருந்து தானாக பணத்தை பிடித்தம் செய்யவும் துவங்கியுள்ள னர். அன்மையில் ரூ.250 தவறு தலுக்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த படிப்பு, வரிகள் பற்றிய அனுபவம் இல்லாத சிறு குறு தொழில் முனைவோர் கடுமையாக பாதிப்படைவார்கள். ஜிஎஸ்டி கவுன்சில் பெரும் நிறுவனங்க ளுக்கு ஆதராவாகவே இருக்கிறது. சிறு, குறு தொழில்களின் நடை முறை பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை என வேதனை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, கோயம் புத்துர் கம்ப்ரசர் தொழில் அமைப் பின் தலைவர் எம்.ரவீந்திரன் கருத் துரையாற்றினார். எம்எஸ்எம்இ சார்பில் ‘கோவை ஒரு சகாப்தம்’ எனும் மலரை மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பி.சண்முக சிவா வெளியிட்டார். தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுவில் அமைப்பின் வேலையறிக்கையை கி.பாண்டியன், நிதி அறிக்கையை பொருளாளர் அ.விஸ்வநாதன் ஆகியோர் முன்வைத்தனர். ஜாப் ஒர்க் மீதான 18 சதவிகித வரியை 5 சதவிகிதமாக குறைக்க வேண் டும். தொழில் கடன்களுக்காக விண் ணப்பிக்கும் போது சிபில் ஸ்கோர் கணக்கில் எடுக்கக்கூடாது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இதைத்தொடர்ந்து, அமைப் பின் தலைவராக தி.மணி, செயலா ளராக கி.பாண்டியன், பொருளாள ராக சக்திவேல், உதவித்தலைவர் களாக மு.பரமேஸ்வரன், அ.விசுவ நாதன், உதவிச்செயலாளர்களாக சி.தனபால், மீ.ஜோதிபாசு, எஸ்.சக்திவேல், து.சிவக்குமார், கௌரவ ஆலோசகராக எம்.ரவீந்தி ரன் உட்பட 25 பேர் கொண்ட செயற் குழு தேர்வு செய்யப்பட்டது. முடி வில், ஜோதிபாசு நன்றி கூறினார்.
