எப்சி கட்டண உயர்வை திரும்பப்பெறுக: ஆட்டோ சங்கம்
நாமக்கல், ஆக.17- ஆட்டோ எப்சி கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என ஆட்டோ தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள் ளது. சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங் கத்தின் நாமக்கல் மாவட்ட மகாசபை, வெள்ளியன்று சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத் தின் மாவட்டத் தலைவர் பி.பொன்னு சாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் கெளஸ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். ஆட்டோ சங்க சம்மேளன பொதுச்செயலாளர் எம்.சிவாஜி துவக்கவுரையாற்றினார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோ கன், மோட்டார் சங்க மாவட்டச் செயலா ளர் சு.சுரேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இக்கூட்டத்தில், ஆன்லைன் அபரா தத்தை தடை செய்ய வேண்டும். ஆட்டோ எப்சி கட்டண உயர்வையும், காலதாமத கட்டண உயர்வையும் திரும்பப்பெற வேண்டும். மோட்டார் வாகன தொழில்களை சீரழிக்கும் சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும். ஓலா, உபர் போன்ற செயலிகளை தடை செய்ய வேண்டும். கால் டாக்ஸிகளை சட்ட திட்டங்களுக்குட்பட்டு இயக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து சங்கத்தின் மாவட்டத் தலைவராக பி.பொன்னுசாமி, செயலா ளராக ஏ.தண்டபாணி, பொருளாளராக க.ஜெயராம். துணைத்தலைவராக ஜேபி.சங்கர், துணைச்செயலாளர்க ளாக கெளஸ், மெய்யநாதன் உட்பட மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் ந.வேலுச்சாமி நிறைவுரை யாற்றினார்.