துப்பாக்கிகள் குறித்து ஆய்வு
சேலம், ஜூலை 29- சேலம் மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி களை காவல் உதவி ஆணையர் கருப்புசாமி ஆய்வு செய்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள், ஆயுதப்படை உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும் துப் பாக்கிகளை வருடத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்யப் படும். அதனடிப்படையில் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் வருடாந்திர ஆய்வு திங்களன்று நடைபெற் றது. ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் இளங் கோவன், ஆய்வாளர் ராமராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாவட்டத்தில் உள்ள மூன்றில் ஒரு பங்கு துப்பாக்கி ரகங்கள் ஆய்வுக்கு வைக்கப்பட்டன. காவல் துறையின் சிறுபடைக்கலன் பிரிவு உதவி ஆணை யர் கருப்புசாமி துப்பாக்கி ரகங்களை ஆய்வு செய்தார். துப்பாக்கியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? செயல் பாடுகள் சரியாக உள்ளதா? முறையாக பராமரிக்கப் படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் காவல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.