tamilnadu

செயற்கை இழை நூலுக்கு ஜிஎஸ்டியைக் குறைக்க வேண்டுகோள் செயற்கை

டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி சிஐடியு போராட்டம்

மேட்டுப்பாளையம், ஆக.16– மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி சிஐடியு  பொதுத்தொழிலாளர் சங்கம் சார்பில்  பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் வெள் ளியன்று நடைபெற்றது.  நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக உள்ள மேட்டுப்பாளை யம் பேருந்து நிலையத்திற்கு, நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக் காண வெளியூர் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மேட் டுப்பாளையம் பேருந்து நிலையத் தைச் சுற்றிலும் நான்கு டாஸ்மாக்  கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பெண்கள்  மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சாலைகள் மற்றும் பேருந்து நிலை யத்தில் பயணாகள் காத்திருக்கும் இடங்களில் அலங்கோலமாக விழுந்து கிடக்கும் குடிமகன்களால் பலரும் முகம் சுளித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையத்தில் தினசரி நடை பெறும் போதை ஆசாமிகளின் சண்டை சச்சரவுகள் பயணிகளை அச் சமடைய வைக்கின்றது. இது தொடர் பாக, மேட்டுப்பாளையம் சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கம் சார்பில் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மற்றும் கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதனால் சிஐடியு பொதுத்தொழி லாளர் சங்க தாலுகா செயலாளர் பாஷா தலைமையில் நூற்றுக்கணக் கானோர், பேரணியாக வந்து மேட்டுப் பாளையம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்  சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோ கரன் உட்பட திரளானோர் பங்கேற்ற னர்.