tamilnadu

img

பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்குக - சிஐடியு மனு

பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்குக - சிஐடியு மனு

கோவை, ஆக.12- கோவை தெற்கு மாவட்டத்தில் பணியிடை நீக்கம் செய் யப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் 7 பேருக்கு மீண்டும் பணி,  பிழைப்பூதியம் வழங்க கோரி கோயம்புத்தூர் டாஸ்மாக் சங்கம் (சிஐடியு) மனு அளித்தனர்.  கோவையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கான குறை தீர்ப்பு  முகாம் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து  கொண்ட கோயம்புத்தூர் மாவட்ட டாஸ்மாக் சங்கம் (சிஐடியு)  நிர்வாகிகள் கோவை தெற்கு டாஸ்மாக் மேலாளரை சந்தித்து  நான்கு அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர்.  அதில் வால்பாறை உள்ளிட்ட மலை பிரதேசப் பகுதிகளில் டாஸ் மாக் விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக மாற்றி அமைக்க  வேண்டும். “எண்டு டூ எண்டு” தொழில்நுட்ப பிரச்சனைகளால்  இரவு 1 மணி வரை பணி நேரம் நீட்டிக்கப்படுவதை முடிவுக்கு  கொண்டு வர வேண்டும். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆய்வின்போது தெற்கு மாவட்டத்தில் 7 டாஸ்மாக் ஊழியர் கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் பணி மற்றும் பிழைப்பூதியம் வழங்க வேண்டும். டாஸ் மாக் கடைகளில் ஊழியர்களின் பற்றாக்குறையை போக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். ஊழியர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட மேலாளர் உடனடியாக பிழைப்பூதியம் வழங்க நடவடிக்கை  எடுப்பதாகவும், பணியிடை நீக்கம் தொடர்பாக விரைவில் விசாரணை மேற்கொள்வோம் என உறுதியளித்தார். முன்னதாக இந்த மனு கொடுக்கும் இயக்கத்தில், கோயம் புத்தூர் மாவட்ட டாஸ்மாக் சங்கம் (சிஐடியு) மாவட்டத்  தலைவர் ஜான் தலைமையில், பொருளாளர் ராம கிருஷ்ணன்,  துணைத் தலைவர்கள் ரமேஷ், ஆனந்தன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.