மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு
ஈரோடு, செப். 7- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பபோர் உரிமைகளுக்கான சங்கத்தின் தாளவாடி வட்ட இரண்டாவது மாநாடு தாளவாடியில் நடைபெற்றது. வட்டத் தலைவர் ராயப்பா தலைமை வகித்தார். அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன், மாவட்டத் தலைவர் டி.சாவித்திரி, மாவட்ட செயலா ளர் ப.மாரிமுத்து, மாவட்டப் பொருளாளர் ராஜு ஆகி யோர் உரையாற்றினர். இதில், தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக உதவித்தொகை வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட் டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. சங்கத்தின் தலைவராக ராயப்பா, செயலாளராக ஏ.பி.ராஜு பொருளாளராக குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.