tamilnadu

img

உடுமலை அருகே புலிக்குத்திக்கல்

உடுமலை அருகே புலிக்குத்திக்கல்

உடுமலை, அக்.7- உடுமலை ஜல்லிபட்டி கொங்குரார் குட்டைக்கு அருகில் புலிக்குத்திக்கல் கண்டறியப்பட்டு உடுமலை வரலாற்று  ஆய்வு நடுவத்தினர் ஆவணப்படுத்தி யுள்ளனர்.  உடுமலை ஜல்லிபட்டி அருகே லிங்கம்மாவூருக்கும், கொங்குரார்  குட்டைக்கு அருகில் இருக்கும் காட்டுப்  பகுதியில் இரண்டடிக்கும் உயரமான புலியை ஒரு வீரன் குத்துவது போன்று  புலிக்குத்திக்கல் சிலை காட்டுப்பகுதி யில் இருக்கின்றது. இதனை போடி  தாத்தன் கோவில் வழிபாடுக்குச் செல் லும் முன்பு இதனை வழிபட்டு செல்வது வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். தளி பகுதியில் ஆட்சி செய்த பாளை யக்காரர்கள் காலத்தில் இதுபோன்று  கற்சிலைகள் உருவாக்கப்பட்டிருக்க லாம். ஏனெனில் அப்பொழுதுதான் கால்ந டைகளுக்காகவும், நீர் மேலாண்மைக் காகவும் உயிர்த் தியாகம் செய்த வீரர்க ளின் நினைவாக புடைப்புச்சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கற்சிற் பங்கள் சுமார் 300 முதல் 400 ஆண்டு கள் வரை இருக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி  தெரிவிக்கிறார். ஒரு வீரன் புலியை அடக்கியதற்காக வும், அவன் புலியிடம் சிக்கி இறந்து பட்ட தற்காகவும் இவ்வாறான நினைவு நடு கற்கள் வைக்கப்பட்டிருக்கலாம் என்று  கூறப்படுகிறது. இந்தப் பகுதி பெரும்பா லான மேய்ச்சல் நிலமாக இருப்பதா லும், கால்நடைகளையும், மேய்ச்சல்  நிலங்கள், பொதுமக்களை விலங்கிடமி ருந்து காப்பாற்றுவதற்காக இது போன்று ஈகம் செய்த வீரர்களை நடு கற்கள் வைத்து வழிபட்டு வருவதாக வும் கடந்த கால ஆய்வுகளில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஏற்க னவே பதிவு செய்துள்ளனர். மேலும்,  இந்தப்பகுதியில் புலியை நரி என்று  சொல்லும் வட்டார வழக்குச்சொல்லும் இருக்கிறது. அது போன்று நரிப்பாறை,  நரிக்கடிச்சான் பாறை என்ற சொற்றொ டர்களும் புலியைப் பற்றிய சொற்களாக  இந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். தேவனூர் புதூருக்கு அருகிலும், புங்கமுத்தூர் பகுதியிலும் இதுபோன்று புலிக்குத்தி புடைப்புச்சிற்பங்கள் இருப்பதும், அதுவும் நாயக்கர் காலச் சிற்பங்களாக ஏற்கனவே உடுமலை வர லாற்று ஆய்வு நடுவத்தினர் பதிவு செய் துள்ளனர்.