தியாகி முத்து 71 ஆம் நினைவு தின பொதுக்கூட்டம்
கோவை, ஜூலை 7- உப்பிலிபாளையம் தியாகி முத்து 71 ஆவது நினைவு நாள் மலர் அஞ்சலி பொதுக்கூட்டம் உப்பிலி பாளையம் பூங்கா திடலில் திங்க ளன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நடத்தின. கோவை மாவட்டம், சிங்காநல் லூர் கோத்தாரி மில் தொழிலா ளியான உப்பிலிபாளையம் தோழர் முத்து, பஞ்சாலை தொழிலாளர்க ளின் உரிமைக்கான போராட்டத்தில் முன்னின்றவர். செங்கொடி இயக்கத் தின் தலைமையில் போராடிய தோழர் முத்துவை, ஆலை நிர்வாகம் குண்டர் களை ஏவி படுகொலை செய்தது. வர்க்கப்போராட்டத்தில் சமரசமின்றி போராடி தியாகம் செய்த தோழர் முத்துவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும், சிபிஎம் மற்றும் சிபிஐ சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகி றது. இந்நிலையில், அவரின் 71 ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, திங்களன்று மாலை உப்பி லிபாளையம் பூங்கா திடலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நினைவு தின மலரஞ்சலி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி வழக்கறிஞர் கே.சுப்பிர மணியம் தலைமை வகித்தார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு உறுப்பினர் ஏ.தமிழ்ச்செல்வன் வரவேற்றார். மார்க்சிய ஆய்வாளர் எஸ்.பாலச்சந்திரன் துவக்க உரை யாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செய லாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ், வி. தெய்வேந்திரன், சிங்காநல்லூர் நகரச் செயலாளர் ஆர்.மூர்த்தி, இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் மௌ. குண சேகர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பி னர் மு.வ கல்யாண சுந்தரம் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். முடிவில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உப்பிலிபாளையம் மேற்கு கிளைச் செயலாளர் ஏ.ரெனித் குமார் நன்றி கூறினார். இதில், திரளா னோர் கலந்து கொண்டனர்.