tamilnadu

img

8 ஆவது ஊதிய மாற்றம் கோரி 23 இடங்களில் ஆர்ப்பாட்டம்

கோரி 23 இடங்களில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக. 29 - எட்டாவது ஊதிய மாற் றத்திற்கான ஒன்றிய அரசால்  அறிவிக்கப்பட்ட குழுவினை விரைந்து அமைத்து செயல் படுத்தவும், விரைந்து ஊதிய மாற்றம் செய்து, ஊதிய மாற்ற பணப்பலன்களை வழங்கிடவும்வலியுறுத்தி அனைத்து அரசு அலுவலகங் கள் முன்பும் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாராபுரம் வட்டக்கிளையில் வெள்ளி யன்று காலை முதல் மாலை வரை அரசு அலு வலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஊரக வளர்ச்சித் துறை, அரசு மருத்து வமனை, நகராட்சி, மாவட்ட கல்வி அலுவல கம், அறநிலையத்துறை, வட்டாட்சியர் அலு வலகம், வட்டார கல்வி அலுவலகம், நெடுஞ் சாலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை துறை, கூட்டுறவுத் துறை,  கருவூல கணக்குத் துறை, வணிகவரித் துறை,  பத்திரப் பதிவுத் துறை  தொழிற்பயிற்சித் துறை, கோட்டாட்சியர் அலுவலகம், மூல னூர் ஆரம்ப சுகாதார நிலையம், மூலனூர் சார்  பதிவாளர் அலுவலகம், மூலனூர் பேரூராட்சி,  வட்டார வளர்ச்சி அலுவலகம், கல்வித்துறை அலுவலகம் உள்ளிட்ட 23 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதில், வட்டக் கிளை நிர்வாகிகள் கே.செந்தில்குமார் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் 140 பெண்கள் 165 ஆண் கள் என 305 பேர் பங்கேற்றனர்.