tamilnadu

img

சேலம் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து இன்று தர்ணா!

சேலம் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து இன்று தர்ணா!

இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு

சேலம், செப்.1- தமிழக முதல்வரின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கும் சேலம் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, செவ்வாயன்று தர்ணா நடைபெறும் என இந்திய மருத்துவ சங்கம் அறி வித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய மருத் துவ சங்கத்தின் முன்னாள் தேசிய துணைத்தலைவர் டாக்டர் பிரகாசம் திங்களன்று சேலத்தில் செய்தியா ளர்களிடம் கூறுகையில், சேலம் சாரதா கல்லூரி சாலையில் இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தின் அருகே டாஸ்மாக் கடை ஹைடெக் பார் வசதியுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்துவோர், சங்க கட்டடத்துக்குள்ளும், அப்பகுதியி லுள்ள குடியிருப்புகளும் புகுந்து  அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதனால் எங்களின் சங்க கூட்டம்  உட்பட எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், உள்ளூர் போலீசார், அமைச்சர் வரை புகாரளித்தும் நடவ டிக்கை எடுக்கவில்லை. மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சர் முத்து சாமியின் வேண்டுகோளை வைத்து கடந்த முறை போராட்டத்தை கைவிட் டோம். முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்த நிலையில் முதல்வர் உத்தரவிட்டும் அரசு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் அந்த உத்தரவை  மதிக்க தவறுகின்றனர். இந்நிலை யில், மாவட்ட நிர்வாகத்தைக் கண் டித்து, மருத்துவ சங்கத்தின் கட்ட டத்தின் முன்னும், பிரச்சனைக் குரிய டாஸ்மாக் கடை முன்பும் பொது மக்களை திரட்டி செவ்வாயன்று (இன்று) தர்ணாவில் ஈடுபட முடிவு  செய்துள்ளோம், என்றார். இந்த  பேட்டியின் போது, சங்கத்தின் நிர் வாகிகள் உடனிருந்தனர்.