டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மறியல்
சேலம், செப்.2- சேலம் 5 ரோடு அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை இடமாற் றம் செய்ய வேண்டும் என வலியு றுத்தி மருத்துவர்கள் மறியலில் ஈடுபட்ட னர். சேலம் 5 ரோடு சந்திப்பில் இந்திய மருத்துவ சங்க கட்டடத்தின் அருகே அரசு டாஸ்மாக் கடை கடந்த 3 ஆண்டு களாக செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு வரும் மது பிரியர்களின் எண் ணிக்கை அதிகரித்து வருவதால், அப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இரவு நேரங்க ளில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு, சாலையோரங்களில் படுத்து கிடப்ப தால் பாதசாரிகள் சாலையை பயன்ப டுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், போதையில் சங்கத்தின் அலு வலகத்திற்குள்ளும், பொதுமக்கள் குடி யிருப்புக்குள்ளும் அத்துமீறி நுழைவ தால், பாதுகாப்பற்ற சூழல் நிலவி வரு கிறது. எனவே, இப்பகுதியில் செயல் பட்டு வரும் டாஸ்மாக் கடையை இட மாற்றம் செய்ய வேண்டும் என வலியு றுத்தி இந்திய மருத்துவ சங்கத்தினர் பலமுறை முறையிட்டும் தற்போது வரை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், தமிழக முதல் வர் உத்தரவிட்டும், மாவட்ட நிர்வாகத்தி னர் அந்த உத்தரவை நிறைவேற்றுவ தில் சுணக்கம் காட்டி வருகின்றனர். இத னைக் கண்டித்து இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் துணைத்தலை வர் பிரகாசம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் டாஸ்மாக் கடை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட னர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பி னர் அருள் கலந்து கொண்டு முழக்கங் களை எழுப்பினார். சம்பந்தப்பட்ட டாஸ் மாக் கடையை அரசு விரைந்து இட மாற்றம் செய்யவில்லை எனில், அடுத்த கட்டமாக தொடர் போராட்டத்தில் ஈடு படவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர்.