tamilnadu

நீலகிரி உயிர் சுழல் மண்டலத்தை ஆய்வு செய்ய செயற்கைக்கோள் அனுப்ப திட்டம்

நீலகிரி உயிர் சுழல் மண்டலத்தை ஆய்வு செய்ய செயற்கைக்கோள் அனுப்ப திட்டம்

உதகை, ஆக.27- தன்னாட்சி அந்தஸ்து பெற்ற சிஎஸ்ஐ கல்லூரி சார்பில், நீலகிரி உயிர் சுழல் மண்டலத்தை ஆய்வு செய்ய செயற்கைக்கோள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை அடுத்த கேத்தியில் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. இதை யொட்டி செவ்வாயன்று கல்லூரி யில் நடந்த நிகழ்ச்சியில் தலைவர் திமோத்தி ரவீந்தர் கலந்து கொண் டார். அப்போது அவர் பேசியதா வது, சிஎஸ்ஐ கல்லூரி 1998 ஆம் ஆண்டு சிஎஸ்ஐ கோயம்புத்தூர் திருமண்டலத்தால் தொடங்கப் பட்டது. தென்னிந்திய அளவில் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரே பொறியியல் கல்லூரியாக உள்ளது. கடந்த 26 ஆண்டுகளில் 25,000-க்கும் மேற்பட்ட மாணவ மற்றும்  மாணவிகள் பட்டம் பெற்றுள்ளனர்.  இந்த கல்லூரி 2023 ஆம் ஆண்டில்  நாக் (NAAC) அங்கீகாரத்தைப் பெற் றுள்ளது. இந்த கல்லூரி நீலகிரி மாவட்டத்தில் தொழில் வளர்ப்பு மையமாக தமிழ்நாடு அரசால் அங் கீகரிக்கப்பட்டுள்ளது. இங்கு  கல்வியுடன் சேர்த்து விளையாட் டுக்கும் அதிக அளவு முக்கியத்து வம் தரப்படுகிறது. மத்திய அரசின்  கீழ்வரும் அடல் (ATAL) ஆய்வகத் தின் மூலம், பல பள்ளிகளுக்கு ஆராய்ச்சி மற்றும் புதுமுனைவு தொடர்பான உதவிகளை வழங்கி  வருகிறோம். சமூக முன்னேற்றத் திற்காக, எங்கள் தேசிய சேவைத் திட்டம் (NSS) அணி, கிராமப்புறப் பள்ளிகள் மற்றும் உள்ளூர் சமூ கங்களுக்கு பல்வேறு விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரு கிறது.  கல்லூரியின் மொத்த முன்னேற் றத்தை கருத்தில் கொண்டு, 2025 ஜூலை 28 ஆம் தேதியன்று முதல்  2029–30 கல்வியாண்டு வரை  சிஎஸ்ஐ கல்லூரிக்கு பல்கலைக் கழக மானியக் குழு மூலம் சுயாட்சி  அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுக்குள் பல் கலைக்கழக அந்தஸ்தை அடைய  முயற்சி செய்கிறோம். மேலும், நீலகிரி உயிர் சூழல் மண்டலத்தை  ஆய்வு செய்ய செயற்கைக்கோள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந் நிகழ்ச்சியில் தாளாளர் காட்வின் ஆர்.டேனியல், இயக்குனர் பி.டி.அருமைராஜ், முதல்வர் ஆர்.மெர்சி  சாந்தி உள்பட பலர் கலந்து கொண் டனர்.